Today Rasipalan: ரிஷபத்திற்கு வளர்ச்சி... மிதுனத்திற்கு நல்ல பலன்... இன்றைய ராசிக்கு என்ன பலன்?
Today Rasipalan : இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 17.05.2022
நல்ல நேரம் :
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை
காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை
மாலை 7.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை
இராகு :
மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
குளிகை :
மதியம் 1 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
எமகண்டம் :
காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை
சூலம் – வடக்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே, இன்று சற்று மந்தமான நாள். இன்று சிறிது குழப்பத்துடன் காணப்படுவீர்கள். நெருங்கிய நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இசை கேட்பது மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிளில் கலந்து கொள்வது ஆறுதலை அளிக்கும்
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, இன்று வளர்ச்சி காணப்படும் நாள். சிறிதளவு முயற்சியில் அதிக வெற்றி காண்பீர்கள். இன்று நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே, சுய முயற்சியில் நல்ல பலன்களைக் காண்பீர்கள். இன்று காணப்படும் மகிழ்ச்சியும் திருப்தியும் உங்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.
கடகம் :
கடக ராசி நேயர்களே, நல்ல சிந்தனை மூலம் சிறப்பான செயல்களுக்கு முயற்சி செய்வீர்கள். உணர்ச்சி வசப்படுதலை தவிர்க்க வேண்டும்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, சில சமயங்களில் அமைதியின்மையை உணர்ந்தாலும் அறிவார்ந்த செயல்களை செய்யுங்கள். பொறுமையான அணுகுமுறை மேற்கொண்டால் சிறந்தது.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே, உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும். நீங்கள் உங்கள் நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்வீர்கள். இன்று அதிர்ஷ்டம் காணப்படும்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே, பிரார்த்தனை மற்றும் இறை வழிபாடு மன ஆறுதலை அளிக்கும். விவேகமான அணுகுமுறை மேற்கொள்வது நல்லது.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே, இன்று உறுதியுடன் இருக்க வேண்டிய நாள். நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையையும் கவனமாக ஆற்றினால் வெற்றி நிச்சயம்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே, ஆன்மீக ஈடுபாடு நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். இதுவே உங்களின் எதிர்கால போக்காக ஆகிவிடும்.
மகரம் :
மகர ராசி நேயர்களே, இன்றைய நாள் உற்சாகமான மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.எனவே மகிழ்ச்சியுடன் இன்றைய நாளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, நீங்கள் எந்த விஷயத்தையும் இன்று எளிதாக எடுத்துக் கொண்டு வெற்றி காண்பீர்கள். உங்கள் விருப்பங்கள் எளிதில் நிறைவேறும்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, இன்று நம்பிக்கையுடனும் புத்துணர்ச்சியுடனும் உங்கள் செயல்களை ஆற்ற வேண்டும். சுலோகம் சொல்வது மற்றும் தியானம் மேற்கொள்வதன் மூலம் இது சாதித்யம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்