மேலும் அறிய

Rasipalan November 11: தனுசுக்கு மறதி... விருச்சிகத்துக்கு மாற்றம்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவை தான்!

RasiPalan Today November 11: இந்த நாள் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 11.11.2022

நல்ல நேரம்:

காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

காலை 01.45 மணி முதல் காலை 02.45 மணி வரை
 
மாலை 06.30 மணி முதல் மாலை 07.30 மணி வரை

இராகு:

காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

குளிகை:

காலை 07.30 மணி முதல் காலை 09.00 மணி வரை

எமகண்டம்:

மதியம் 03.00 மணி முதல் மாலை 04.30 மணி வரை

சூலம் - மேற்கு

மேஷம்

விடாப்பிடியாக செயல்பட்டு சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த பொருளாதாரம் சார்ந்த இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செயல்படுவது நல்லது. செய்கின்ற செயல்பாடுகளில் மறைமுகமான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். வெளியூர் பயணங்களால் வெளிவட்டார நட்பு மேம்படும். நன்மை நிறைந்த நாள்.

ரிஷபம்

தோற்றப்பொலிவு மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வரவுக்கு ஏற்ப செலவுகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

மிதுனம்

வியாபாரத்தில் வேலையாட்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தெய்வ தரிசனம் மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகத்தில்  சக ஊழியர்களால் இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். நம்பிக்கை மேம்படும் நாள்.

கடகம்

பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். ரகசியமான செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் சார்ந்த பணிகளில் மதிப்பும், மரியாதையும் மேம்படும். திறமைகள் வெளிப்படும் நாள்.

சிம்மம்

புத்துணர்ச்சியான சிந்தனைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். தடைகள் குறையும் நாள்.

கன்னி

புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதளவில் மாற்றம் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். புனித தலங்களுக்கு சென்று வருவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

துலாம்

உயர் பொறுப்பில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். குழப்பமான சிந்தனைகளின் மூலம் மனதில் சோர்வு உண்டாகும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் ஏற்படும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.

விருச்சிகம்

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும். போட்டிகளில் கலந்து கொண்டு ஆதாயம் அடைவீர்கள். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.

தனுசு

வியாபாரம் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி உற்சாகம் அடைவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திறமைகளுக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்களிடத்தில் உங்களின் மீதான மதிப்பு அதிகரிக்கும். மறதி நிறைந்த நாள்.

மகரம்

மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்ப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். சகோதரர்களின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நெருக்கமானவர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். நிறைவான நாள்.

கும்பம்

குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும். இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் ஒப்பந்தம் சாதகமாக முடியும். எதிலும் சிக்கனத்துடன் செயல்படுவது நல்லது. வீடு மற்றும் மனை சார்ந்த வியாபாரத்தில் லாபம் உண்டாகும். ஆதாயகரமான நாள்.

மீனம்

புண்ணிய தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் அமையும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் தடைபட்ட பணிகள் நிறைவுபெறும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். குடும்பத்தில் அமைதியான சூழல் உண்டாகும். செல்வாக்கு மேம்படும் நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Starlink Internet Price: ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!Mohammed Shami controversy | ரமலான் நோன்பு.. அவமதித்தாரா முகமது ஷமி? இஸ்லாம் சொல்வது என்ன?Mayor Issue | “பொண்ணுனா கேவலமா போச்சா” கடலூர் மேயர் Vs அதிகாரிகள் மோதல் பின்ணனி என்ன? | CuddaloreJyotika on Vijay | ”என் புருஷன் கேவலமா போயிட்டாரா குப்பை படத்த கொண்டாடுறாங்க” விஜயை சீண்டிய ஜோதிகா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Starlink Internet Price: ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
மக்களே உசார்.! சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! லிஸ்ட் இதோ
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
குடும்ப தலைவிகளுக்கு இனி மாதம் ரூ.2,500 வழங்கப்படும்; முதல்வர் அதிரடி அறிவிப்பு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
விறு, விறு மதுரை எய்ம்ஸ் பணி.. சுற்றுவட்டார பகுதி நிலங்களுக்கு அதிகரிக்கும் மவுசு
Jio SpaceX Deal: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான செய்தி.. விரைவில் வருது Starlink இன்டர்நெட்.. முழு விவரம்
Chennai Car Parking Rules: ஏங்க.. பைக், கார் வாங்கப் போறீங்களா.? இந்த புது ரூல்ஸ் பத்தி தெரிஞ்சா முடிவு மாறிடும்...
ஏங்க.. பைக், கார் வாங்கப் போறீங்களா.? இந்த புது ரூல்ஸ் பத்தி தெரிஞ்சா முடிவு மாறிடும்...
Soundarya Death: 6 ஏக்கர் நிலத்துக்காக பறிபோனதா நடிகை சௌந்தர்யாவின் உயிர்? விசாரணை வளையத்தில் பிரபல நடிகர்?
Soundarya Death: 6 ஏக்கர் நிலத்துக்காக பறிபோனதா நடிகை சௌந்தர்யாவின் உயிர்? விசாரணை வளையத்தில் பிரபல நடிகர்?
ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!
ஜெயலலிதா சேலையை பிடித்து இழுத்தவங்க இவங்க! நாகரிகம் பற்றி பேசலாமா? – லிஸ்ட் போட்டு திமுகவை சாடிய நிர்மலா!
Embed widget