மேலும் அறிய
Advertisement
மதுரை: ஜூலை 30ல் மீனாட்சியம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டு உற்சவ கொடியேற்றம் - கோயில் நிர்வாகம் அறிவிப்பு
திருவிழா நடைபெறும் 10 நாட்களிலும் சுவாமியும், அம்மனும் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி காலை, மாலை என இருவேளைகளிலும் ஆடி வீதிகளில் வலம் வர உள்ளனர்.
உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டு உற்சவ கொடியேற்றம் ஜூலை 30ம் தேதி நடைபெறும் என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
#madurai | உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டு உற்சவ கொடியேற்றம் ஜூலை 30-ம் தேதி நடைபெறும் என மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
— Arunchinna (@iamarunchinna) July 7, 2022
Further report's to follow - @abpnadu#மீனாட்சியம்மன் | @SRajaJourno
| @city_madurai | #Madurai pic.twitter.com/FEfrNp2oWA
கடம்பவனத்துப் பேரரசி மீனாட்சி, மதுரையின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறாள். ‘ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி’ என்றே மீனாட்சியை பெருமை கொள்வர். சித்திரை மாதமே போற்றும் மீனாட்சியின், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் தேவரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் முதலாவது தலமாகும்.
இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மீனாட்சியம்மன் கோயிலை மையமாக வைத்தே மாமதுரை நிர்மாணிக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து அதன் வேலை நடைபெறாமல் இருந்த சூழலில் தற்போது மீண்டும் விறு, விறுப்பாக நடைபெற்று, கும்பாபிஷேகத்திற்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் மீனாட்சியம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு உற்சவம் ஜூலை 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - காரைக்குடி: வீட்டுக்குள் ஆட்கள் இருக்கும் போதே ஆட்டையப் போட்டு மூட்டயகட்டிய திருடர்கள் - ஜன்னல் வழியே 40 பவுன், 50 ஆயிரம் கொள்ளை !
திருவிழா நாட்களில் மீனாட்சியம்மன் கோவில் சார்பில் தங்கரத உலா, உபய திருக்கல்யாண நிகழ்வுகளை பக்தர்கள் பதிவு செய்ய இயலாது என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவிழா நடைபெறும் 10 நாட்களிலும் சுவாமியும், அம்மனும் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி காலை, மாலை என இருவேளைகளிலும் ஆடி வீதிகளில் வலம் வர உள்ளனர். தற்போது அரசு விதித்துள்ள வழிகாட்டுதல், கொரானா கட்டுபாடுகள் படி விழா நடைபெறும் என திருக்கோயில் இணை ஆணையர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion