காரைக்குடி: வீட்டுக்குள் ஆட்கள் இருக்கும் போதே ஆட்டையப் போட்டு மூட்டயகட்டிய திருடர்கள் - ஜன்னல் வழியே 40 பவுன், 50 ஆயிரம் கொள்ளை !
காரைக்குடியில் வீட்டுக்குள் ஆட்கள் இருக்கும் போதே வீட்டு ஜன்னலை உடைத்து 40 பவுன் நகை, 50 ஆயிரம் பணம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி கற்பக விநாயகர் நகரைச் சேர்ந்தவர் ஆனந்த குமார் (61). இவர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் பணி செய்து ஓய்வு பெற்றவர். இந்நிலையில் இவரது மகன் ஆகியோர் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுதே பீரோக்கள் இருந்த அறையின் ஜன்னலை உடைத்து கதவை தாழிட்டு விட்டு பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகை, வைர மோதிரம் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் ஐம்பதாயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#sivagangai | காரைக்குடியில் வீட்டுக்குள் ஆட்கள் இருக்கும் போதே வீட்டு ஜன்னலை உடைத்து 40 பவுன் நகை, 50 ஆயிரம் பணம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுதியுள்ளது. இது குறித்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.#madurai | #karaikudi | #theft | #police | #serching | @s_palani | pic.twitter.com/kz2yBluwqN
— Arunchinna (@iamarunchinna) July 7, 2022

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

