மேலும் அறிய
Advertisement
தங்க கருட வாகனத்தில் கள்ளழகர் ; கருப்பண்சாமி சன்னதியில் சந்தனக்காப்பு !
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆலயத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படாமால் விழா நடைபெற்றது.
அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோயிலில் நடைபெற்ற ஆடி கருட சேவை மற்றும் பதினெட்டாம்படி கருப்பண சுவாமி சந்தன காப்பு வைபவம் வெகு விமர்சயாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம் அழகர்கோயிலில் உள்ள கள்ளழகர் கோவில் வளாகத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆடிமாதம் நடைபெறும் ஆடிப்பிரம்மோற்சவ பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆடி திருவிழாவை காண பொதுமக்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டி கட்டி வருவது சிறப்பாக இருக்கும். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய அழகர்கோவிலில், ஆடிப்பெருந் திருவிழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
அடிப்பெருந் திருவிழாவில் திருக்கோயில் பட்டர்கள் வேத மந்திரங்கள் முழங்க, பக்தர்களின் "கோவிந்தா, நமோ நாராயணா" என்ற பக்தி கோஷத்துடன் நடைபெற்றுது. இதையொட்டி கிட்டதட்ட 11 நாட்கள் திருவிழாக்கள் நடைபெற்று முடிந்தது. இந்த திருவிழாவில் ஸ்வாமி தினசரி காலை பல்லக்கிலும், இரவு வாகங்களிலும் அருள் பாலித்தார். அன்ன வாகனம், சிம்ம வாகனம், தங்க வாகனம், அனுமன் வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், தங்க குதிரை வாகனம் என தினமும் ஒவ்வொரு வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார்.
இங்கே சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
இந்நிலையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று அருள்மிகு கள்ளழகர் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி காட்சிதந்தார். அப்போது பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தி பாராயணம் பாடினர். தொடர்ந்து ஆலயத்தின் முன்புள்ள அருள்மிகு பதினெட்டான்படி கருப்பணசாமி சன்னதியில் உள்ள கதவுகளுக்கு சந்தன காப்பு வைபவம் நடைபெற்றது. கள்ளழகர் ஆலயத்தில் இருந்து மாலை கொண்டுவரப்பட்டு கதவுகளுக்கு சாத்தப்பட்டது. தொடர்ந்து பதினெட்டான்படி கருப்பணசாமி சன்னதியிலும் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன.
மேலும் மதுரை கள்ளழகர் ஆடிப்பெருந்திருவிழா தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - அழகர்கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றம் சிறப்பு புகைப்படங்கள் !
கருப்பணசாமி கதவுகளுக்கு ஆண்டுதோறும் ஆடி பௌர்ணமி அன்று கதவுகள் திறக்கப்பட்டு படிபூஜைகள் நடத்தப்படும். அதேபோல ஆடி அமாவாசை நாளில் கதவுகளுக்கு மட்டும் சந்தனகாப்பு நடத்தி அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுவது வழக்கம்.
நேற்று மாலை நடைபெற்ற விழாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆலயத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படாமால் விழா நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் அனிதா மற்றும் கோயில் பணியாளர்கள் மேற்கொண்டிருந்தனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion