உங்க வீட்ல கண்ணாடி எங்கே வச்சுறுக்கீங்க!... வாஸ்து முறைப்படி கண்ணாடி வைப்பதற்கான 10 டிப்ஸ்!
கண்ணாடி என்பது உருவத்தைப் பார்க்க மட்டுமல்லாமல், அதற்கு ஆன்மிக மற்றும் ஜோதிடர ரீதியான பல முக்கியத்துவங்கள் உள்ளன. எனவே கண்ணாடியை வீட்டில் வாஸ்து முறைப்படி எங்கு வைக்கலாம் என அறிந்துகொள்வது அவசியம்!
நம்மை அப்படியே, நமக்கு பிரதிபலித்துக் காட்டும் இந்த கண்ணாடியை வீட்டில் எந்தெந்த இடத்தில் எல்லாம் எப்படி வைக்க வேண்டும் எப்படி வைக்கவே கூடாது என்பதை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். கண்ணாடி என்பது நம் உருவத்தைப் பார்க்க மட்டுமல்லாமல், அதற்கு ஆன்மிக மற்றும் ஜோதிடர ரீதியான பல முக்கியத்துவங்கள் உள்ளன. கண்ணாடியிலிருந்து வெளிப்படும் ஆற்றல் நல்ல மற்றும் கெட்ட விஷயங்கள் அடங்கியது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, கண்ணாடியிலிருந்து ஒரு வகை ஆற்றல் வெளியே வருகிறது. எனவே கண்ணாடியை வீட்டில் வாஸ்து முறைப்படி எங்கு வைக்கலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பிரதிபலிப்பு
முதல் விஷயம், கண்ணாடிகள் நேர்மறை விஷயங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருப்பதை உறுதி செய்யவும்.
உயரம்
கண்ணாடியை சுவரில் வைக்கும்போது அதை சரியான உயரத்தில் வைப்பது அவசியம். நம் உருவத்தைப் பார்க்கும் போது குறைவான உயரத்திலோ அல்லது அதிக உயரத்திலோ இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். சரியான உயரத்தில் கண்ணாடி வைத்து, நாம் பார்ப்பதில் சிரமம் ஏற்படின் அது குடும்ப உறுப்பினர்களுக்கு பிரச்சினையைத் தரும். ஆகையால் எப்போதும் கண்ணாடியை நான்கைந்து அடி உயரத்தில் வைப்பதே சிறந்தது.
நேருக்குநேர்
சலூன் கடையில் இருப்பதை போல, அறையின் சுவர்களில் கண்ணாடியை நேருக்கு நேராக மற்றொரு கண்ணாடியை வைப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது வீட்டின் உறுப்பினர்களிடையே அமைதியின்மை மற்றும் குழப்பத்தை அதிகரிக்கும்.
தென்மேற்கு
தென்மேற்கில் உள்ள கண்ணாடி குடும்ப உறுப்பினர்களிடையே மோதல்களை ஊக்குவிக்கும் மற்றும் பல வாக்குவாதங்களுக்கு வழிவகுக்கும். இங்குள்ள கண்ணாடிகள் உங்கள் செலவுகளை இரட்டிப்பாக்கலாம், பொதுவாக தேவையற்ற செலவுகள் ஏற்படும்.
டைனிங் டேபிள்
டைனிங் டேபிளை பிரதிபலிக்கும்படி கண்ணாடியை வைக்கலாம். இதன்மூலம் வீட்டில் உணவு தட்டுப்பாடு வராதிருக்கும், குடும்பத்திற்கு செல்வத்தை கொண்டு வந்து சேர்க்கும்.
குளியலறை
குளியலறையின் கதவில் ஒருபோதும் கண்ணாடியை வைக்காதீர்கள். அவை உங்கள் அறையிலோ அல்லது வாழும் இடத்திலோ தீய ஆற்றலைப் பிரதிபலிக்கும்.
சமையலறை
கண்ணாடியை படிக்கட்டில் இருந்து தள்ளி வைக்கவும், சமையலறையில் கண்ணாடியைப் பயன்படுத்தக் கூடாது. மேலும், சமையலறை பகுதியை பிரதிபலிக்கும்படியும் கண்ணாடிகளை வைக்கக் கூடாது.
படிக்கும் அறை
படிக்கும் மேசைக்கு அருகில் கண்ணாடியை வைத்திருப்பது கவனக் குறைவை உண்டாக்கும். இது வாஸ்து படி படிக்கும் அறையை வடிவமைக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும்.
படுக்கையறை
படுக்கையறையில் கண்டிப்பாக கண்ணாடியைத் தொங்கவிட வேண்டும். ஆனால் அதில் சரியான கண்ணாடி வைக்கும் திசைகளை மனதில் கொள்ள வேண்டும்: வடக்கு, கிழக்கு, வடகிழக்கு மற்றும் மேற்கு சுவர்கள் கண்ணாடி வைக்க ஏற்ற திசைகள்.
டிரெஸ்ஸிங் டேபிள்
உங்கள் படுக்கையறையில் கண்ணாடியுடன் கூடிய டிரஸ்ஸிங் டேபிள் இருந்தால், அது உங்கள் படுக்கையை நேர் எதிராக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாஸ்து படி, கண்ணாடியுடன் கூடிய டிரஸ்ஸிங் டேபிளை படுக்கையில் இருந்து தெரியாமல் மறைத்து வைக்க வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்