World Water Day: உலக தண்ணீர் தினம்; மதுரையில் 5 ஆயிரம் மாணவிகள் உறுதிமொழி
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மதுரையில் 5 ஆயிரம் மாணவிகள் ஒருங்கிணைந்து தண்ணீர் சேமிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
#WorldWaterDay
— arunchinna (@arunreporter92) March 21, 2023
மதுரையில் தண்ணீர் தின விழிப்புணர்வு ஏற்படுத்த 5 ஆயிரம் மாணவிகள் இணைந்து தண்ணீர் சேமிப்பு குறித்த உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இதில் யெங் இந்தியா அமைப்பை சார்ந்த #சர்மிளா மற்றும் க்ளைமேட் சேஞ் #பொன்குமார் உள்ளிட்டோர் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். #abp pic.twitter.com/8JeTUZe2bn
அதிகரித்து வரும் தொழிற்சாலைகள், இயற்கை வளங்களை சுரண்டல், தண்ணீருக்கான பயன்பாடு அதிகரித்தல் போன்றவைதான் இந்த காலக்கட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. சில நாடுகளில் முன் கூட்டியே மாற்று ஏற்பாடாக கடல்நீரை சுத்திகரித்து பயன்படுத்தும் முறையை விரைவாகவே துவங்கிவிட்டனர். இன்று மார்ச் 22 ஆம் தேதி தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
5 ஆயிரம் மாணவிகள் உறுதிமொழி:
கடந்த 1992 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு குறித்த ஐ.நா பொதுச் சபையின் மாநாட்டின் முடிவில் உலகம் முழுவதும் தண்ணீர் தினம் கடைப்பிடிப்பது பற்றிய யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 அன்று தண்ணீர் தினம் என்ற தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. 1993 முதல் உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது நன்னீர் மற்றும் இந்த குறிப்பிடத்தக்க வளத்தின் நிலையான மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் மதுரையில் யங் இந்தியா சமூக அமைப்பு, எல்.டி.சி., கல்லூரியோடு இணைந்து 5 ஆயிரம் நபர்களை கொண்டு தண்ணீர் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழியை ஏற்றுக் கொண்டனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்