மேலும் அறிய

மாத்திரை முறையில் குறுவை சாகுபடி... மயிலாடுதுறையில் உருமாறிய விவசாய முறை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் காப்சூல் முறையில் குறுவை சாகுபடியை பாரம்பரிய நெல் விவசாயி மேற்கொண்டுள்ளார்.

உலகத்தில் வருங்காலங்களில் உணவு என்பது மாத்திரை வடிவில் வந்து விடும் எனவும், ஒவ்வொருவரும் மாத்திரையை விழுங்கி விட்டு செல்வார்கள் என பலராலும் நகைச்சுவையாக கூறப்பட்டு வந்தாலும், அது போன்ற நிகழ்வுகள் நடப்பதற்கு சாத்தியக்கூறுகளே அதிகம் உள்ளது. அதற்கு உதாரணமாக தற்போது விவசாய முறையின் மாத்திரை வடிவெடுத்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை பொதுவாகவே நாற்று நடவு முறை மூலமே நெல் பயிரிடப்படுகிறது. ஆனால் தற்போது நெல்லை கேப்சூல் ஆக உருவாக்கி நடவு செய்யும் முறை அறிமுகமாகியுள்ளது.

மாத்திரை முறையில் குறுவை சாகுபடி... மயிலாடுதுறையில் உருமாறிய விவசாய முறை!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மங்கைநல்லூரைச் சேர்ந்தவர் 51 வயதான ராஜசேகர். எம்.காம்., பி.எட்., டி.சி.ஏ., டிசிபிஏ., பி.ஜி.டி.சி.எம்., ஐசிடபிள்யூஏ, அக்ரிகல்சர் டிப்ளமோ உள்ளிட்ட பல்வேறு பட்ட, பட்டயப் படிப்புகளை முடித்துள்ளார். பல்வேறு படிப்புகளை படித்திருந்தாலும், இவர் விரும்பி ஏற்றுக் கொண்டது தொழில் என்னவோ  விவசாயம் மட்டுமே. இவருக்கு மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அனந்தமங்கலம் ஊராட்சி கந்தமங்கலம் கிராமத்தில் தனக்கு சொந்தமான உள்ள ஐந்து ஏக்கர் நிலத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறார். 

மாத்திரை முறையில் குறுவை சாகுபடி... மயிலாடுதுறையில் உருமாறிய விவசாய முறை!

இதில் கடந்த 5 ஆண்டுகளாக பாரம்பரிய நெல் ரகங்களை கொண்டு இயற்கை விவசாயம் மேற்கொண்டுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு ஆகும். தனது வயலில் கருப்புக்கவுனி, சீரகசம்பா, தூயமல்லி, கருங்குறுவை, அறுபதாம் குறுவை, ரத்த சாலி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்துவரும் விவசாயி ராஜசேகர், ஒவ்வொருமுறையும் புதுமையான முயற்சிகளை பரீட்சார்த்த அடிப்படையில் மேற்கொண்டு வருகிறார். 

மாத்திரை முறையில் குறுவை சாகுபடி... மயிலாடுதுறையில் உருமாறிய விவசாய முறை!

அந்த வகையில் இந்த ஆண்டு தனது ஒரு ஏக்கர் நிலத்தில் அறுபதாம் குறுவை நெல் ரகத்தை கேப்ஸ்யூல் முறையில் இவர் நடவு செய்துள்ளார். கடலைப்புண்ணாக்கு, இலுப்பை புண்ணாக்கு, வேப்பம்புண்ணாக்கு மற்றும் பிளான்ட் பிரோமோட்டிங் கிரானுல்ஸ் ஆகியவற்றை 3:1:1:1 என்ற விகிதாச்சாரத்தில் கலந்து உரமாக்கி கொண்ட விவசாயி ராஜசேகர் அதனை ஒரு காப்சூலில் மூன்று விதைகளையும் சேர்த்து விதைக்கிறார். இதற்கான விதையை ஐசிஐசிஐ பவுண்டேஷன் என்ற தனியார் நிறுவனத்திடம் இவர் பெற்றுள்ளார்.

மாத்திரை முறையில் குறுவை சாகுபடி... மயிலாடுதுறையில் உருமாறிய விவசாய முறை!

பொதுவாக ஒரு ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்ய 30 கிலோ நெல் விதை தேவைப்படும் நிலையில், கேப்சூல் முறையில் நடவு செய்ய வெறும் இரண்டரை கிலோ விதைநெல் மட்டுமே போதுமானது என்றும், பொதுவாக 110 நாள் சாகுபடிக்கு தேவைப்படும் நிலையில் இந்த முறையில் நடவு செய்யும்போது 90 நாட்கள் மட்டுமே தேவைப்படும் மேலும் தண்ணீர் பற்றாக்குறையான இந்த காலகட்டத்தில் குறைவான தண்ணீர் மட்டும் போதும் என்கிறார் விவசாயி ராஜசேகர். விவசாயி ராஜசேகரின் புதுமையான இந்த முயற்சியை சக விவசாயிகள் ஆர்வமுடன் உற்றுநோக்கி வருவதுடன் பல விவசாயிகளுக்கு முன் மாதிரியாக திகழ்த்து வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!

Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?

TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கு; ஆதாரமும் இருக்கு - அடித்து சொல்லும் ஐஐடி காமகோடி 

இந்த தண்டனை போதாது; மாநில அரசு நினைப்பது வேறு: பெண் மருத்துவர் கொலை வழக்கில் பொங்கிய மம்தா!

UGC draft: சர்ச்சையைக் கிளப்பிய யுஜிசி வரைவறிக்கை: சாட்டையைச் சுழற்றிய முதல்வர் ஸ்டாலின்!

நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வழக்கு; குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள்!

Embed widget