மேலும் அறிய

நெல் தரிசல் உளுந்து சாகுபடி செய்ய முன்வாருங்கள் - விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் வேண்டுகோள்

நெல் தரிசில் சம்பா/தாளடி சாகுபடிக்குப்பிறகு மார்கழி- தை மாதங்களில் பயறு வகை பயிர்கள் சாகுபடியை மேற்கொள்ளலாம்.

தஞ்சாவூர்: நெல் தரிசல் உளுந்து சாகுபடி செய்ய அனைத்து விவசாயிகளும் முன் வரவேண்டும் என்று தஞ்சாவூர் வேளாண்மை உதவி இயக்குநர் ஐயம்பெருமாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தஞ்சாவூர் வட்டாரத்தில் சம்பா பருவத்தில் சுமார் 14000 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நெல் தரிசில் உளுந்து பயிர் சாகுபடி செய்ய அனைத்து விவசாயிகளும் முன்வர வேண்டும். நெல் அறுவடைக்கு பின் உளுந்து சாகுபடி செய்வதன் மூலம் குறைந்த நாளில் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம்.

தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பயறு வகை பயிறுகளின் சாகுபடியை ஊக்கப்படுத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்கும் விதமாக நெல்லுக்குப் பின் உளுந்து சாகுபடி திட்டம் இவ்வாண்டில் சிறப்பு திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. இதன்படி நெல்லுக்குப்பின் உளுந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உளுந்து விதை ஏக்கருக்கு 8 கிலோ வீதம் 50 சத மான்யத்தில் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த வட்டாரத்தில் தஞ்சாவூர் விரிவு, சூரக்கோட்டை, வல்லம் மற்றும் மானங்கோரை வேளாண்மை விரிவாக்க மையங்கள் விதை உளுந்து இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகள் தங்கள் விபரத்தை உழவன் செயலியில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். நெல் தரிசில் சம்பா/தாளடி சாகுபடிக்குப்பிறகு மார்கழி- தை மாதங்களில் பயறு வகை பயிர்கள் சாகுபடியை மேற்கொள்ளலாம். இதற்கு உளுந்து -ஆடுதுறை 3, 5, 6, வம்பன் 6, 8 , பாசிபயிறு - ஆடுதுறை 3,கோ8 ரகங்கள் உகந்தது.
சரியான அளவு பயிர் எண்ணிக்கையை பராமரிப்பதால் அதிக விளைச்சல் பெற வாய்ப்புள்ளது. எனவே பயறு வகை பயிர்களை ஏக்கருக்கு 10 கிலோ விதை என்ற அளவில் விதைக்க வேண்டும்.

நெல் தரிசல் உளுந்து சாகுபடி செய்ய முன்வாருங்கள் - விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் வேண்டுகோள்

சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைக்கு 7-10 நாட்களுக்கு முன் மண் ஈரம் மெழுகுப்பதத்தில் இருக்கும் போது விதைக்க வேண்டும். நெல் தரிசு பயிறுவகைப் பயிர்களை பயிறுகளின் ஆரம்ப கால வளர்ச்சி பருவத்தில் பல்வேறு களைகள் போட்டியிட்டு மகசூலை பாதிப்பதால் களை நிர்வாகம் இன்றியமையாதது. நெல் தரிசுப்பயிரில் விதைத்த 18-20 ஆம் நாள் அதாவது சம்பா நெல் அறுவடை செய்த 10 ம் நாள் குயிஸலாபாப் ஈத்தைல் என்ற களைக்கொல்லியை ஏக்கருக்கு 400 மி.லிட்டர் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லிட்டர் அளவில் தெளிப்பதால் வயலில் உள்ள புல் வகைகள், நெல் மறுதாம்பு பயிர் மற்றும் அறுவடையின் போது விழுந்து முளைத்த நெல் நாற்றுகள் ஆகியவை நன்கு கட்டுப்படுத்தப்படுவதால் உளுந்து பயிருக்கு மண்ணில் உள்ள எஞ்சிய ஈரம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப்படுகிறது. எனவே, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி நிறைந்த மகசூலும் வருவாயும், மண்வளத்தையும் கொடுக்கும் உளுந்து சாகுபடியை அனைத்து விவசாயிகளும் மேற்கொண்டு பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget