மேலும் அறிய

கழனிகளில் கிடைக்கும் கழிவுகளில் இருந்து உரமாக்கும் உயரிய எளிய தொழில் நுட்பங்கள்

தஞ்சாவூர்: கழனிகளில் கிடைக்கும் கழிவுகளில் இருந்து உரமாக்கும் உயரிய எளிய தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை அளிக்கப்பட்டுள்ளது.

கழிவுகளை வளமான உரமாக மாற்றுவதன் மூலம் வளிமண்டல மாசுபாடு, மண்ணின் வளம் சரி செய்யப்பட்டு பல நன்மைகளை அளிக்க வழி வகுக்கிறது. இதன் மூலம் வேளாண் உற்பத்தி திறன் அதிகரித்து மண்ணின் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. எனவே இயற்கை உரம் தயாரிக்க முன்வர வேண்டும் என தஞ்சாவூர் வேளாண் இணை இயக்குனர் (பொ) ஈஸ்வர் விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

இயற்கையாகவே கழிவுகளானது நுண்ணுயிர்களால் சிதைக்கப்பட்டோ அல்லது மக்கப்பட்டோ உருவானால் அது மக்கும் உரம். பயிர் கழிவுகள், விலங்குகளின் கழிவுகள், உள்ளாட்சி கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் மூலம் ஏராளமான இயற்கை உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

உரம் மண்ணில் உள்ள கரிம பொருள்களின் அளவை அதிகரிக்கிறது. இது மண்ணின் உயிரினங்கள், மண்ணின் அமைப்பு, ஊடுருவல், நீர் வைப்புத் திறன் மற்றும் மண்ணின் வளம் ஆகியவற்றில் சாதகமான விளைவை உருவாக்குகிறது. உரத்தில் தாவரங்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதன் மூலம் நோய்கள், பூச்சிகள், களை விதைகள் அழிக்கப்படுகிறது. ஏனெனில் உரக்குவியலில் வெப்பநிலை மிக அதிகமாக இருப்பதால் அவை உயிர் வாழ முடியாது.

கழனிகளில் கிடைக்கும் கழிவுகளில் இருந்து உரமாக்கும் உயரிய எளிய தொழில் நுட்பங்கள்

இயற்கை உரம் தயாரிக்கும் முறைகள்:

பாரம்பரிய முறைகள்
குழி முறை
குவியல் முறை

மேம்படுத்தப்பட்ட முறைகள்:

இந்தூர் முறை, நாடெப் முறை, தென்னை நார் கழிவு உரம், பண்ணை கழிவுகளை மக்க வைக்கும் முறை

மேம்படுத்தப்பட்ட உரம் தயாரிக்கும் முறைகள்

பெரும்பாலான முறைகளில் உரம் தயாரிப்பதற்கு 100-180 நாட்கள் ஆகும். எனவே உரம் தயாரிக்கும் பணியை விரைவுபடுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உரம் தயாரிப்பாளர்கள் தற்போது மக்கும் பொருளை விரைவாக சிதைப்பதற்கும், அதிலிருந்து வரும் துர்நாற்றத்தை குறைப்பதற்கும் திறன்மிகு நுண்ணுயிரிகளை பயன்படுத்துகின்றனர். இந்த நுண்ணுயிர் கலவை வெவ்வேறு வணிகப்பெயர்களில் விற்கப்படுகிறது. அவை விலை உயர்ந்தவை மற்றும் குறைந்த தரமுடையதாகும். தற்போது அரசு நிறுவனங்கள், தனிமைப்படுத்தப்பட்ட திறன்மிகு வேஸ்ட் டீகம்போசர் மற்றும் பயோ மினரல்ஸ் உற்பத்தி செய்து அவற்றை மேலும் பெருக்கி உரம் உற்பத்தியாளர்களால் பயன்படுத்தப்படுகிறது.

இந்தூர் முறை

இந்த முறை இந்தியாவில் உரம் தயாரிப்பதற்கான முதல் விஞ்ஞான முயற்சியாகும். இந்த முறையில் கழிவு பொருட்களை சாணம் அல்லது மனித கழிவுகளால் பரப்பி ஈரப்படுத்தப்படுகிறது. குழியின் அளவு நீளம் 4- 6 மீட்டர், அகலம் ஒரு மீட்டர், உயரம் 1 மீட்டர் உடையதாக இருக்க வேண்டும். கழிவு பொருட்களை அடுக்கு மூலம் குழியில் நிரப்பப்படுகிறது, 15 நாட்களுக்கு ஒரு முறை கழிவுகளை கிளறி விட வேண்டும் போதுமான காற்றோட்டம் தரும்போது நுண்ணுயிரிகளின் செயல்திறன் அதிகரிக்கிறது. உரம் 3, 4 மாதங்களில் தயாராகிவிடுகிறது.

நாடெப் முறை:

இந்த முறையில் குறைந்த அளவு கால்நடை சாணம் பயன்படுத்தி உரம் தயாரிக்கப்படுகிறது. ஒரு கிலோ மாட்டு சாணத்தில் இருந்து 40 கிலோ உரம் தயாரிக்கலாம். 100 டன் உரம் தயாரிக்க ஒரு வருடத்தில் கிடைக்கும் ஒரு பசுவின் சாணம் போதுமானது. மண்ணின் மேற்பரப்பில் செங்கற்களால் கட்டப்பட்ட ஒரு தொட்டியில் உரம் தயாரிக்கப்படுகிறது.

உள்ளூரில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு 15 சென்டிமீட்டர் அளவு இடைவெளியுடன் 9 அடுக்கில் இந்த தொட்டி கட்டப்படுகிறது இவ்வாறு அமைப்பதால் காற்றின் சுழற்சி நன்கு இருக்கும். சுவர் சாணத்தால் பூசப்பட்டிருக்க வேண்டும். கழிவு பொருட்கள் அடுக்கு மூலம் தொட்டியில் நிரப்பப்படுகிறது. முதல் அடுக்கு பயிர் கழிவுகள், களைகள் புல் போன்றவை 15 சென்டிமீட்டர் உயரத்திற்கு நிரப்ப வேண்டும். இந்த அடுக்கிற்கு மேல் 125 லிட்டர் தண்ணீரில் மாட்டு சாணத்தை கொண்டு தயாரித்த கரைசலை மெல்லிய அடுக்கு வடிவில் பரப்பப்படுகிறது. இந்த அடுக்குகள் செங்கல் மட்டத்திலிருந்து 0.6 முதல் 0.75 மீட்டர் உயரத்திற்கு அமைக்க வேண்டும்.
 
தொட்டியை அதன் முழு கொள்ளளவில் நிரப்ப 11- 12 அடுக்குகள் தேவை. ரெண்டு நாட்களில் கழிவுகளை கொண்டு நிரப்ப வேண்டும். மேலும் குவியல்களில் வாயு கசிவு ஏற்படக் கூடாது.

20 நாட்களுக்குப் பிறகு குப்பை அமிழ்ந்த பிறகு 9 அங்குலங்கள் தொட்டியில் இறங்கி அதே முறையில் நிரப்பப்பட்டு மீண்டும் மண் மற்றும் சாணத்தை கொண்டு மூட வேண்டும். 160 - 175 கன அடி உயரம் மற்றும் 40- 50 கன அடி அளவு கழிவு பொருட்களில் இருந்து சுமார் மூன்று டன் எடையுள்ள உரம் பெறப்படுகிறது. ஒரு பசுவில் இருந்து ஒரு வருடத்தில் சேகரிக்கப்படும் சாணத்தில் இருந்து 80 டன் உரம் தயாரிக்கலாம் இதில் 100 கிலோ தழைச்சத்து, 560 கிலோ மணிச்சத்து மற்றும் 140 கிலோ சாம்பல் சத்து கிடைக்கும். ஒரு தொட்டியை உருவாக்க ரூபாய் ஆயிரம் செலவாகும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Embed widget