மேலும் அறிய

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியம், கருகும் பயிர்கள் : வேதனையில் மயிலாடுதுறை விவசாயிகள்

மயிலாடுதுறை அருகே வயலுக்கு செல்லும் மின்கம்பம் சாய்ந்து விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், போர் செட்டுகளுக்கு மின்சாரம் இல்லாமல் குறுவை சாகுபடி செய்யமுடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

காவிரி கடைமடை மாவட்டம் 

காவிரி டெல்டாவின் கடைமடை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்டம். இங்குள்ள மக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். மேலும் காவிரி நீரை மட்டும் இன்றி இங்கு பல பகுதிகளில் நிலத்தடி நீரை கொண்டு முப்போகம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் மின்சார பற்றாக்குறையால் தற்போது இப்பகுதி விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கோமல் கிழக்கு பகுதியில் 100 ஏக்கருக்கு மேல் 21 பம்பு செட்டுகள் மூலம் நிலத்தடி நீரை பயன்படுத்தி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. 

Covishield Side Effects: கோவிஷீல்ட் தடுப்பூசியால் பக்க விளைவு.. ஒப்புக்கொண்ட நிறுவனம்.. பகீர் கிளப்பும் அறிக்கை..!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியம், கருகும் பயிர்கள் : வேதனையில் மயிலாடுதுறை விவசாயிகள்

துவங்கிய குறுவை சாகுபடி 

இந்த சூழலில் தற்போது அப்பகுதியில் விவசாயிகள் குறுவை சாகுபடி துவங்கியுள்ளனர். இந்த வேளையில் வயலில் உள்ள இரண்டு மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததில் உயர் மின் அழுத்த மின்கம்பிகள் அறுந்துள்ளது. இதனால் உழவு அடித்து நிலத்தை தயார் செய்த விவசாயிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச மின்சாரம் இல்லாமல் விவசாய பணிகளை தொடர முடியாமல் தவித்து வருகின்றனர். காமராஜ் என்ற விவசாயி விவசாய பணிகளை தொடங்கி, 8 ஏக்கர் நிலத்தில் நீர் பாய்ச்சி, வயல் முழுவதுமாக உழவு அடித்து, அதற்கு தேவையான நாற்றங்கால்களை விதை விட்டிருந்த நிலையில், மின்சாரம் தடைபட்டதால், முளைக்கத் தொடங்கியுள்ள நாற்றங்கால்களை காப்பாற்றுவதற்கு கூட தண்ணீர் இல்லாமல் பாதிப்புக்கு உள்ளானார்.

Watch Video: அப்பார்ட்மெண்டுக்குள் விளையாடிய 6 வயது சிறுமி.. விரட்டி கடிக்கும் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்.. அதிர்ச்சி வீடியோ!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியம், கருகும் பயிர்கள் : வேதனையில் மயிலாடுதுறை விவசாயிகள்

அலட்சியம் காட்டும் மின்வாரியம் 

இதனை அடுத்து, அப்பகுதி விவசாயிகள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, மறுநாளே அங்கு சென்ற மின்வாரிய ஊழியர்கள் அங்கு புதிதாக 3 மின் கம்பங்களை நட்டுள்ளனர். ஆனால், அதன் பின்னர் அங்கு மின் கம்பிகளை சீரமைக்கும் பணிகள் நடைபெறவில்லை. இதனால், போர்வெல் மூலம் தண்ணீர் இறைத்து நிலங்களை உழவு அடிக்கும் பணியில் ஈடுபட்ட விவசாயிகள் அதனை தொடர முடியாமல் நிறுத்தியுள்ளனர். மேலும், நாற்றங்கால்களை கருகாமல் காப்பாற்றுவதற்காக விவசாயி காமராஜ் என்பவர் சுமார் 2 கி.மீட்டர் தூரத்துக்கு டிராக்டர் மூலமாக கேன்களில் தண்ணீர் எடுத்து வந்து அதை டியூப் கொண்டு நாற்றங்காலுக்கு பாய்ச்சி நாற்றங்கால்களை காப்பாற்றி வருகிறார். 

TN Weather Update: வதைக்கும் வெயில்.. மே 2 மற்றும் 3-ஆம் தேதி மஞ்சள் அலர்ட்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு?

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியம், கருகும் பயிர்கள் : வேதனையில் மயிலாடுதுறை விவசாயிகள்

வேதனையில் விவசாயிகள் 

மேலும் உழவு அடிக்கப்பட்ட 8 ஏக்கர் விவசாய நிலமும் தண்ணீர் இல்லாமல் முற்றிலுமாக வறண்டு வெடிக்க தொடங்கி உள்ளது. இதனால் உடனடியாக அப்பகுதியில் மின் இணைப்பு கொடுத்தால் கூட மீண்டும் ஒருமுறை உழவு பணிகளை முதலில் இருந்தே தொடங்க வேண்டுமென விவசாயி காமராஜ் வேதனை தெரிவித்துள்ளார். இதுவரை 8 ஏக்கர் விவசாய நிலத்துக்கு 60,000 ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக கூறும் விவசாயி காமராஜ், உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் மின் இணைப்பு வழங்கி, கருகத் தொடங்கியுள்ள பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Ammonia Gas Leak: கோவை உருளைக்கிழங்கு சிப்ஸ் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு.. மக்கள் வெளியேற்றம்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Slams DMK:
EPS Slams DMK: "2026 வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்" - எடப்பாடி பழனிசாமி
"திருவள்ளுவருக்கு வர்ணம் பூசுறாங்க" பாஜகவுக்கு எதிரான ஸ்கெட்ச்.. அடித்து ஆடும் தவெக விஜய்!
பாலக்காடு அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 4 பேர் உயிரிப்பு
பாலக்காடு அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 4 பேர் உயிரிப்பு
TVK Resolution: 2026க்கு அச்சாரம் போடும் தவெகவின்  26 தீர்மானங்கள்: அக்ரசிவ் மோடில் திமுக - பாஜகவை தாக்கிய விஜய்.!
TVK Resolution: 2026க்கு அச்சாரம் போடும் தவெகவின் 26 தீர்மானங்கள்: அக்ரசிவ் மோடில் திமுக - பாஜகவை தாக்கிய விஜய்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்துDhanush Aishwarya | ரஜினி வீட்டில் நடந்த மீட்டிங்?இணையும் தனுஷ் ஐஸ்வர்யா குஷியில் சூப்பர் ஸ்டார்!TVK VCK Flag issue | அகற்றப்பட்ட தவெக கொடி   மறியலில் இறங்கிய மக்கள்   களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Slams DMK:
EPS Slams DMK: "2026 வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்" - எடப்பாடி பழனிசாமி
"திருவள்ளுவருக்கு வர்ணம் பூசுறாங்க" பாஜகவுக்கு எதிரான ஸ்கெட்ச்.. அடித்து ஆடும் தவெக விஜய்!
பாலக்காடு அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 4 பேர் உயிரிப்பு
பாலக்காடு அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 4 பேர் உயிரிப்பு
TVK Resolution: 2026க்கு அச்சாரம் போடும் தவெகவின்  26 தீர்மானங்கள்: அக்ரசிவ் மோடில் திமுக - பாஜகவை தாக்கிய விஜய்.!
TVK Resolution: 2026க்கு அச்சாரம் போடும் தவெகவின் 26 தீர்மானங்கள்: அக்ரசிவ் மோடில் திமுக - பாஜகவை தாக்கிய விஜய்.!
"தமிழக மக்களை ஏமாற்றும் திமுக அரசு" இறங்கி அடித்த விஜய்.. 2026ஐ குறிவைக்கும் தவெக!
IND Vs NZ:  வரலாற்றில் மோசமான தோல்வி - நியூசிலாந்திடம் 3-0 என டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி
IND Vs NZ: வரலாற்றில் மோசமான தோல்வி - நியூசிலாந்திடம் 3-0 என டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி
WTC Points Table: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் - இந்தியாவிற்கு பேரிடி, ஃபைனல் வாய்ப்பு இருக்கா?
WTC Points Table: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் - இந்தியாவிற்கு பேரிடி, ஃபைனல் வாய்ப்பு இருக்கா?
US President Salary: வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபர் சம்பளம் எவ்வளவு? ஆச்சரியமூட்டும் சலுகைகள், மோடிக்கு?
US President Salary: வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபர் சம்பளம் எவ்வளவு? ஆச்சரியமூட்டும் சலுகைகள், மோடிக்கு?
Embed widget