மேலும் அறிய

Drip irrigation System: 100%  மானியத்தில் கிணறுகள்..! மின்மோட்டாருடன் நுண்ணீர்ப் பாசன வசதி..! வழிமுறைகள் இதுதான்

100 % மானியத்தில் ஆழ்துளை கிணறு /  குழாய் கிணறு அமைத்து மின்மோட்டாருடன்  நுண்ணீர்  பாசன வசதி  அமைத்து   கொடுக்க  அரசாணை வழங்கப்பட்டு, அதன்படி  இத்திட்டம்  செங்கல்பட்டு   மாவட்டத்தில்  செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆதி திராவிட (ம) பழங்குடியின விவசாயிகளுக்கு 100%  மானியத்தில் கிணறுகள் (ஆழ்துளை (அ) குழாய்க் கிணறுகள்)  அமைத்து சூரிய சக்தி மூலம் இயக்கப்படும் பம்பு செட்டு (அ)  மின்மோட்டாருடன் நுண்ணீர்ப் பாசன வசதி அமைத்துத் தருதல் திட்டம் குறித்த தகவல்ககள்.

நுண்ணீர்  பாசன வசதி

தமிழ்நாட்டில் பாசன நீர் ஆதாரங்களை புதிதாக உருவாக்கி அதிக பரப்பில் சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் அதிக விளைச்சல் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்  அரசு பல்வேறு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தனிப்பட்டட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 100  சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறு /  குழாய் கிணறு அமைத்து மின்மோட்டாருடன்  நுண்ணீர்  பாசன வசதி அமைத்து  கொடுக்க  அரசாணை வழங்கப்பட்டு, அதன்படி  இத்திட்டம்  செங்கல்பட்டு   மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒரு துளி நீரில்  அதிக பயிர்  

தமிழ்நாடு முழுவதிலும்  உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தனிப்பட்ட ஆதிதிராவிட   மற்றும் பழங்குடியின   விவசாயிகள்    பயன்பெறும்    வகையில்     ஊரக வளர்ச்சி     ஊராட்சி துறையினரால்  அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சி  திட்டத்தின் கீழ்   2022-23 ஆம் ஆண்டு பணி மேற்கொள்ள   தேர்வு செய்யப்பட்ட பஞ்சாயத்து கிராமங்களில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம்  உருவாக்கப்படும் கிணறுகளுக்கு மின்/ சூரிய சக்தி மூலம் நீர் இறைக்கும்  அமைப்பு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் உருவாக்கப்பட்டபின்,  பாசன நீர் விநியோகக் குழாய்கள் அமைக்கும் பணிகள்  மற்றும் சொட்டு நீர்ப்பாசன அமைப்பு நிறுவும்  பணிகள் பிரதம மந்திரி  வேளாண் நீர்ப்பாசன திட்டம் – ஒரு துளி நீரில்  அதிக பயிர்  - நுண்ணீர் பாசனத் திட்டம் வேளாண்மை/   தோட்டக்கலைத் துறையினரால் ஏற்படுத்தப்படும்.

சிறு மற்றும் குறு ஆதி திராவிட பழங்குடியின  விவசாயிகளும்

வருவாய் துறையின் மூலம்  வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழின் அடிப்படையில்  இத்திட்டதின்  பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். இத்திட்டத்திற்காக   இதுவரை விவசாயிகளை   கண்டறியப்படும்  பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரிய விவசாயிகளைப் போல, சிறு மற்றும் குறு ஆதி திராவிட பழங்குடியின விவசாயிகளும் பயன்பெறும் வகையில் , பாசன அமைப்புகளை உருவாக்கி  நிலத்தில் சாகுபடியினை மேற்கொள்ள வேண்டும்  என்ற  உயரிய  எண்ணத்தில், தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள   இத்திட்டத்தினை வேளாண்   பெருமக்கள்    பயன்படுத்திட சம்பந்தப்பட்ட மாவட்ட வேளாண்மைப்  பொறியியல் துறை அலுவலகத்தினை  அணுகலாம்.

செங்கல்பட்டு  மாவட்ட  விவசாயிகள்  தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

1)  செயற்பொறியாளர்(வே.பொ.)

     487, அண்ணா சாலை,

     நந்தனம், சென்னை-35.

2)  உதவி செயற்பொறியாளர்(வே.பொ.),

      வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மையம்,

      ஐயனார் கோயில் பேருந்து நிலையம்,

      மதுராந்தகம்(இருப்பு) சிலாவட்டம்,

     மதுராந்தகம் – 603  306. கைபேசி எண்:94440  73322

3) உதவி செயற்பொறியாளர்(வே.பொ.),

     487, அண்ணா சாலை,

     நந்தனம், சென்னை-35. கைபேசி எண்:94443  18854

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
HEAVY RAIN ALERT: மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
செங்கோட்டையன் கோட்டையிலும் நாங்க தான் கெத்து.! எடப்பாடி பழனிசாமி போட்ட செம பிளான்
TVK VIJAY: ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக்.. வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
ஒவ்வொருவருக்கும் நிரந்தர வீடு, பைக், வீட்டுக்கு ஒரு கார்.! விஜய்யின் அதிரடி
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
Bihar: பீகாரில் திடீரென முட்டிக்கொண்ட பாஜக - ஐக்கிய ஜனதா தளம் - எல்லாம் பதவிக்காகத்தான்?
HEAVY RAIN ALERT: மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
மீண்டும் நெல்லை, தூத்துக்குடிக்கு டார்கெட்.! விரைந்தது மீட்பு படை - ஆட்சியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
திமுக ஒன்றிய செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு! அதிமுக போராட்டம் அறிவிப்பு - சிவி சண்முகம் எச்சரிக்கை
திமுக ஒன்றிய செயலாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு! அதிமுக போராட்டம் அறிவிப்பு - சிவி சண்முகம் எச்சரிக்கை
கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண் நியமனம்.
கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண் நியமனம்.
EPS ADMK: யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
யாருடன் கூட்டணி.? அதிமுக எடுக்கப்போகும் முக்கிய முடிவு- இபிஎஸ் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
IND Vs SA ODI: கில்லுடன் சேர்ந்து டாடா சொன்ன ரெண்டு பேர்.. தெ.ஆப்., தொடருக்கு ஆள் தேடும் இந்திய அணி - கேப்டன் யார்?
Embed widget