(Source: ECI/ABP News/ABP Majha)
Corona test : மொபைல் ஸ்க்ரீன் மூலம் கொரோனா டெஸ்ட் - எப்படினு தெரியுமா ?
அவள் இன்றி அனுவும் அசையாது. இந்த டேர்ம் எதுக்கு பொறுத்தமா இருக்கோ இல்லையோ , ஆனா மொபைபோன்ஸ்க்கும் நமக்குமான கணெக்ட்டுக்கு பொறுத்தமா இருக்கும். இன்னைக்கு எல்லாவகை செயல்பாடுகளுக்கும் நாம ஸ்மார்ட் போன்கள நம்பித்தான் இருக்கோம்.கொரோனா பெருந்தொற்று சமயங்கள்ல கூட குழந்தைகளின் படிப்பு , அரசுகளில் வழிக்காட்டு நெறிமுறைகள், அலுவலக வேலைகள் அப்படினு எல்லாத்துலையும் ஸ்மார்ட்போன்ஸ் ரொம்பவே உறுதுணையா இருந்துட்டு வருது. சோ இப்போ இந்த மொபைல்போன்ஸோட ஸ்க்ரீன பயன்படுத்தி, நாம கொரோனா சோதனை செய்யலாம் அப்படினு ஆராய்சியாளர்கள், தற்பொழுது கொரோனா பரிசோதனை செய்ய, மூக்கு அல்லது தொண்டையில் எடுக்கப்படக்கூடிய மாதிரிகளை பயன்படுத்துகிறாங்க. இவ்வகை சோதனை முறையை பி.சி.ஆர் டெஸ்ட் அப்படினு சொல்லிறோம். இப்படி மூக்கு தொண்டை வழியா சம்பிள்ஸ் எடுக்கும் போது உண்டாகும் சில நிமிட வலிக்காகாவே பிசிஆர் சோதனை எடுக்க பலர் பயப்படுவாங்க. இதுக்கு தீர்வாதான் லண்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்னு , Phone Screen Testing, அப்படிங்குற புது மெத்தர்ட அறிமுகப்படுத்தியிருக்காங்க. இந்த வகை சோதனைய ஷார்ட்டா போஸ்ட் அப்படினு சொல்லுறாங்க, பொதுவா நாம பேசும்போதும் தும்மும் போதும் நிறைய நீர்திவலைகள் வெளியாகும். அந்த நீத்திவலைகள் மொபைல்போன்கள் படியும். அதே போல வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் தும்மும் போதும் பேசும் போது நீர்த்திவலைகள் கூடவே வைரஸும் ட்ராவல் ஆகி மொபைல் ஸ்க்ரீன்ல படியும். சோ மொபைல்ல இருக்க கூடிய அந்த சாம்பிள் வைரச ஒரு துணி மூலமா வைப் பண்ணி அத சில உப்புக்கரைசல்ல சேமித்து, அதுக்கப்பறமா நாம நார்மலா பண்ணக்கூடிய பிசிஆர் சோதனை போலவே பண்ணிக்கலாம் அப்படிங்குறதுதான் ஆராய்சியாளர்கலோட கான்சப்ட்.