Dhoni Retirement | இன்று தோனியின் இறுதி போட்டி?IPL-க்கு GOOD BYE CSK போட்ட பதிவு..! | DC Vs CSK IPL
டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை எம்எஸ் தோனி வழிநடத்த வாய்ப்புள்ளது என்று தெரிவித்த நிலையில் இந்த போட்டி தான் தோனியின் ipl கடைசி போட்டி எனவும் அவர் ஓய்வை அறிவிக்கவுள்ளார் எனவும் பரபரப்பு தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது.
18வது ஐபிஎல் தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இச்சூழலில் தற்போது இத்தொடரில் மிகப்பெரிய சர்ச்சையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான எம். எஸ். தோனியின் பேட்டிங் வரிசைதான். சென்னை அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளம்மிங், தோனி முன்பு போல் இல்லை. அவர் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்தாலும் 8 அல்லது 9 ஓவர்களுக்கு மேல் அவரால் களத்தில் நின்று விளையாட முடியாது. அவரது பேட்டிங் வரிசையை அவரேதான் முடிவு செய்கிறார் என கூறியிருந்தார்.
பயிற்சியாளர் பிளம்மிங்கின் இந்த பேச்சு, ரசிகர்கள் பலருக்கு பல விதமான கேள்விகளை எழுப்பியது. சிஎஸ்கே அணியின் வெற்றிக்காக தோனியால் சில ஓவர்கள் முன்பே இறங்கி பேட்டிங் செய்ய முடியவில்லை என்றால், அவர் நிச்சயம் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டுமா? இந்த முழங்கால் பிரச்சனையுடன் எதற்காக அவர் விளையாட வேண்டும்? என கேள்வி எழுப்பினார்கள்.
இந்த நிலையில் தான் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என IPL ரசிகர்கள் வலியுறுத்தினர். 43 வயதாகும் நிலையில், எம். எஸ். தோனி சென்னௌ சூப்பர் கிங்ஸ் அணியில் தற்போது வரை விளையாடி வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் ஐபிஎல்லில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் அவர் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
இன்று நடைப்பெறும் டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை எம்எஸ் தோனி வழிநடத்த வாய்ப்புள்ளது என்று பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி தெரிவித்தார். முன்னாள் கிரிக்கெடர் ப்ரசன்னா அவரது ட்விட்டர் பதிவில் தோனி அவரது கடைசி ஐபிஎல் ஆட்டம் சனிக்கிழமையான இன்று இருக்காது என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ரஸ்ஸல் #NewProfilePic some memories stay for life என்று தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை டிபியில் வைத்து போஸ்ட் போட்டுள்ளார். இதன்மூலம் தோனி விளையாடும் கடையில் IPL போட்டி, ஓய்வை அறிவிக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது. இது தோனி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.





















