IND VS ENG Test Series : இந்தியா vs இங்கிலாந்து Playing 11ல் மாற்றம்!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. ட்ரெண்ட் ப்ரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால், போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், லார்ட்ஸ் மைதானத்தில் இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இங்கிலாந்து அணியை பொருத்தவரை, கேப்டன் ஜோ ரூட் மட்டுமே பேட்டிங்கை காப்பாற்றி வருகிறார். மற்ற பேட்ஸ்மேன்கள் இன்னும் சிறப்பாக விளையாட தொடங்கவில்லை. இது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. அணி வீரர்களில், காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து பிராட் வெளியேறியுள்ளார். இதனால், இங்கிலாந்து அணியில் நிச்சயம் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும்.





















