இந்தியா PLAYING 11 - கோஹ்லி எடுக்க இருக்கும் TOUGH முடிவு
இந்தியா vs இங்கிலாந்து இடையே 4வது டெஸ்ட் போட்டி நாளை லண்டன் ஓவல் மைதாணத்தில் நடைபெறுகிறது. இதுவரை நிறைவடைந்துள்ள 3 மேட்ச் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் நீடிக்கிறது. ஏனினும் அண்மையில் நடந்து முடிந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 ஆண்டுகளுக்கு பிறகு படு மோசமான இன்னிங்க்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்யாசத்திலான தோல்வியை தழுவியுள்ளது.
இதனால் சில பல விமர்சனங்களை இந்திய அணி எதிர்கொண்டுவரும் நிலையில், இங்கிலாந்து அணியின் துணை பயிர்சியாளர் பால் காலிங்வுட் 4வது டெஸ்டில் கடுமையான சவாலை இந்திய அணியிடமிருந்து எதிர்பார்ப்பதாக தெரிவித்திருக்கிறார். இதனால் நாளை தொடங்கும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் 11 எப்படி இருக்க போகிறது, இறுதியாக தமிழ்நாடு வீரர் ரவிசந்திரன் அஸ்வின் இந்த டெஸ்ட் போட்டியிலாவது களமிரங்குவாரா போன்ற கேள்விகள் சஸ்பென்ஸாக உள்ளது. ஆனால் இந்திய அணியில் 2 அல்லது 3 மாற்றங்களை நாளைய டெஸ்ட் போட்டியில் விராட் கோஹ்லி செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் என்ன ஒரு நல்ல விஷயம் என்றால், 4வது மற்றும் 5வது டெஸ்ட் போட்டிகள் நடைப்பெறும் ஓவல் மற்றும் மான்செஸ்டர் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும், அதே நேரம் பேட்டிங் சாதகமான சூழல் நிலவும் என வரலாறு சொல்கிறது. இந்நிலையில் ஓவல் மைதாணத்தில் நடைப்பெறும் 4வது டெஸ்ட் போட்டியில், 3வது டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்த அடுத்த நாளே பேட்டிங் பயிற்ச்சியை தொடங்கிய கேஎல் ராகுல் மற்றும் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் முறையா 5வது இடம் பிடித்திருக்கும் ரோஹித் சர்மா இருவரும் ஓப்பனிங் இறங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை. மேலும் கடந்த டெஸ்ட் போட்டியில் 91 ரன்கள் அடித்து மீண்டும் ஃபார்மிற்கு திரும்பியுள்ள புஜாரா 3வது வீரராகவும், இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி 4வது வீரராகவும் களமிரங்குவார், இதுவரை இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் எந்த விதமான பிரச்சனையும் இல்லை. ஆனால் இதன் பின்னர் தான் பிரச்சனையே, நம்பர் 5 களமிரங்கும் இந்தியாவின் துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே. சிறிது காலம் முன்பு விராட் கோஹ்லிக்கு பதிலாக டெஸ்ட் போட்டிகளில் ராஹானேவை கேப்டனாக கொண்டு வாருங்கள் என்ற பேச்செல்லாம் எழுந்த நிலையில், தற்போது நடைப்பெற்று வரும் தொடரில் 5, 1, 61, 18, 10 இது தான் ராஹானேவின் ஸ்கோர். 3 டெஸ்டில் 5 இன்னிங்ஸில் விளையாடி வெறும் 95 ரன்கள் மட்டுமே அடித்துள்ள ராஹானேவின் சராசரி 19 மட்டுமே.
அவருக்கு பதிலாக அணியில் ஹனுமன் விஹாரியை களமிறக்க வேண்டும் என்ற குரல் வலுவாக ஒலிக்க தொடங்கியிருக்கிறது. அதே நேரம் ஹனுமன் விஹாரி பார்ட் டைம் சுழர்பந்துவீச்சும் வீச கூடியவர் என்பது, ஓவல் மைதாணத்தில் அவர் களமிறங்குவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்தியாவின் நம்பர் 6 விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் இங்கிலாந்தில் தன்னுடைய வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த திணறி வருகிறார். அவுருக்கு பதிலாக ரித்திமான் சாஹாவை அணியின் உள்ளே கொண்டு வர வேண்டும் என்றும் பார்வைகள் முன்வைக்கபடுகின்றன. ஆனால் ரிஷப் பந்த் ஒரு இளம் வீரர், ஏற்கனவே இங்கிலாந்தில் சென்சுரியும் விளாசி இருகிறார், மேலும் கொஞ்சம் நேரம் ரிஷப் களத்தில் நின்றால், அவரால் என்ன செய்ய முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறார். அதனால் 6வது வீரராக ரிஷப் பந்த் நிச்சயம் களமிரக்கப்படுவார். அதற்க்கு அடுத்த இடத்தில் உள்ள ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, ஓரளவு பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும், 3 டெஸ்ட் மேட்சில் வெறும் 2 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியுள்ளார். அதனால் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஓவல் மைதானத்தில் தமிழக வீரர் ரவிசந்திரன் அஸ்வின் நிச்சயம் களமிறங்குவார் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. மேலும் முழுமையான மேட்ச் ஃபிட் உடன் ஜடேஜா இருக்கிறாரா என்ற கேள்வியும் தற்போது வரை நிலவி வருவது, அஸ்வின் களமிறங்கும் வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது.
அதற்கு அடுத்ததாக வேகப்பந்துவீச்சாளர் பும்ராஹ், ஷமி, சிராஜ் ஆகிய மூவரும் பிளேயிங் 11ல் விளையாடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கபடும் நிலையில், 3வது டெஸ்டில் 22 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கூட கைப்பற்றாத இஷாந்த் சர்மா 4வது வேகப்பந்துவீச்சாளர் ஸ்பாட்டில் இருந்து கலட்டி விடப்படுவார் என்றும், அவருக்கு பதிலாக மீண்டும் ஷர்துல் தாகூர் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் இந்திய அணி 4 வேகப்பந்துவீச்சாளர், 1 சுழற்பந்து வீச்சாளர் யுத்தியை கையாள போகிறதா, அல்லது ஓவல் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ரவி அஸ்வின், ஜடேஜா ஆகிய இரண்டு பேருடன் பிளேயிங் 11-ஐ களமிறக்குமா என்ற கேள்வியும் ஒருப்பக்கம் உள்ளது. ஏனினும் பெரும்பாலும் ஜடேஜாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அஸ்வின் ஒரே சுழற்பந்து வீச்சாளராக களமிறக்கப்பட வாய்ப்பு அதிகம். இந்தியாவின் பிளேயிங் 11: கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, புஜாரா, விராட் கோஹ்லி, ஹனுமன் விஹாரி, ரிஷப் பந்த், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா/ஷர்துல் தாகூர், பும்ராஹ், ஷமி, சிராஜ்..