மேலும் அறிய

கடையில் வேலை செய்த பெண்ணுடன் திருமணத்திற்கு மீறிய உறவு !! கணவர் செய்த சம்பவம்

மிக்சர் கடையில் ஏற்பட்ட தகாத உறவால் கொலையில் முடிந்த சம்பவம் - காவல் துறை விசாரணை

மிக்சர் கடையில் ஏற்பட்ட உறவு

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த மாகரல் பகுதியில் வசித்து வருபவர் சின்னப்பன் ( வயது 50 ) இவர் தனது வீட்டிற்கு அருகிலேயே மொத்தமாக விற்பனை செய்யும் மிக்சர் கடை வைத்து நடத்தி வந்திருக்கிறார். இவரது கடையில் இவருக்கு உதவியாக பஞ்சான் என்ற வடமாநிலத்தவர் ஒருவரும் , பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த தேவி என்ற பெண்ணும் பணிபுரிந்து வந்திருக்கின்றனர்.

கணவன் - மனைவி கருத்து வேறுபாடு 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சின்னப்பனுக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி கணவனை பிரிந்து மகனுடன் விருத்தாசலம் பகுதியில் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சின்னப்பனுக்கும் அவரது கடையில் பணிபுரியும் தேவிக்கும் இடையே வேலையை தாண்டிய பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி அடிக்கடி தனிமையில் இருந்து வந்திருக்கின்றனர். இதற்கிடையில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த தேவியின் கணவர் மனைவியை வேலைக்கு செல்ல வேண்டாம் என பலமுறை கண்டித்திருக்கிறார்.

திருமணத்தை மீறிய உறவு

தேவி தொடர்ந்து வேலைக்கு சென்று வந்த நிலையில் தேவியின் நடத்தையின் மீது மேலும் சந்தேகமடைந்த சரவணன் அவரை கண்காணித்த போது சின்னப்பனுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே சரவணன் தனது மனைவியை தகாத உறவை கைவிடுமாறு கண்டித்து வந்திருக்கிறார்.

இருப்பினும் தேவி சின்னப்பனுடனான உறவை தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த சரவணன் அவரது தந்தையுடன் சேர்ந்து சின்னப்பனை கொல்ல திட்டமிட்டு இரவில் கடையை முடித்து விட்டு திரும்பிய சின்னப்பனை வழிமறித்து கட்டையால் அடித்து கொலை செய்திருக்கிறார்.

காவல் துறைக்கு தகவல்

மிச்சர் கடையில் பணிபுரியும் வடமாநில பஞ்சானன் பணிக்கு வந்த நிலையில் அங்கு ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்த சின்னப்பனைப் பார்த்து அங்கிருந்து பயந்து ஓடிய நிலையில் அக்கம் பக்கத்தினர் பார்த்து வடமாநில நபர் தான் கொலை செய்து விட்டு தப்பிச் செல்வதாக நினைத்து வெங்கல் காவல் துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வெங்கல் காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வடமாநில நபர் பஞ்சானன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் கொடுத்த தகவலின் படி சந்தேகத்தின் அடிப்படையில் தேவி மற்றும் அவரது கணவரை அழைத்து விசாரணை மேற்கொண்டதில் தேவி சின்னப்பனுடன் கள்ள தொடர்பில் இருந்ததால் ஆத்திரமடைந்து சரவணன் அவரது தந்தை சுபாஷ் உடன் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

தலைப்பு செய்திகள்

“100% பாஸ் பண்ணா பிளைட் ஏறுவீங்க!” - சென்னை பள்ளியின் மாஸ் சர்ப்ரைஸ்... வாயடைத்துப்போன மாணவர்கள்!
100% பாஸ் பண்ணா பிளைட் ஏறுவீங்க! - சென்னை பள்ளியின் மாஸ் சர்ப்ரைஸ்... வாயடைத்துப்போன மாணவர்கள்!
" கள்ளக் காதலை கைவிடாத தாய் " கஞ்சா போதையில் மகன் செய்த கொடூர காரியம்
பெண் பயணி உள்ளாடைக்குள் மறைத்து வைத்த அதிர்ச்சிப்பொருள்! சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
பெண் பயணி உள்ளாடைக்குள் மறைத்து வைத்த அதிர்ச்சிப்பொருள்! சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
மக்களே உஷார்! இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!
மக்களே உஷார்! இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
iPhone 18 Pro Max Vs Google Pixel 11 Pro XL: ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ்-ஆ.? கூகுள் பிக்சல் 11 ப்ரோ XL-ஆ.? எது பவர்ஃபுல்லான போன்.? இதோ ஒப்பீடு
Embed widget