PTR Quits DMK IT Wing Secy: ராஜினாமா செய்த பிடிஆர்!ராஜாவுக்கு புதிய பதவி?
PTR Quits DMK IT Wing Secy: தமிழ்நாடு அரசின் நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செயல்பட்டு வருகிறார். அந்த பொறுப்புடன் சேர்த்து இவர் திமுக கட்சி பதவியிலும் இருந்து வந்தார். திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளராகவும் அவர் இருந்து வந்தார். இந்நிலையில் இந்தப் பதவியை தற்போது அவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது நிதியமைச்சராக இருந்து வரும் பழனிவேல் தியாகராஜனுக்கு பணிச்சுமைகள் அதிகமாக உள்ளதாக தெரிகிறது. மேலும் அவர் ஜிஎஸ்டி கவுன்சிலிலும் தமிழ்நாடு சார்பில் பங்கேற்று வருவதால் அவருடைய பணிகள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது





















