Woman Crying : "கலெக்டர் ஐயா காப்பாத்துங்க "கதறி அழுத மூதாட்டி தீயாய் பரவும் காவலர் பதிவு
கடலூரில் பெண் ஒருவர் தனக்கு வீடு கட்டிக்கொடுக்கும் படி கண்ணீர் மலக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடலூர் அடுத்த நெல்லிக்குப்பம் சோழவள்ளி பகுதியில் மூதாட்டி ஒருவர் தனது இரண்டு பெண் பிள்ளைகள், நான்கு பேரப் பிள்ளைகளுடன் ஒரு ஏழ்மையான வீட்டில் வசித்து வருகிறார். மீன் விற்று கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்துக்கொண்டு தனது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்.
இந்த நிலையில் கடலூரில் போக்குவரத்து காவலராக பணிபுரிபவர் ராஜதீபன். வர்களின் வீடு இருக்கும் நிலையை பார்த்து அதிர்ந்து போன போக்குவரத்து காவலர் ராஜதீபன் இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் முடிவு செய்தார். தனது மாத சம்பளத்திலிருந்து அவர்களுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களை வாங்கி கொடுத்து உதவி செய்தார்.
மேலும் தங்களுக்கு உதவ வேண்டும் என அந்த மூதாட்டி கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தற்போது கடலூரில் கனமழை பெய்து வருவதால் அந்த வீட்டில் இருக்க முடியாத நிலையில் உள்ள குடும்பத்தினருக்கு தன்னார்வ அமைப்புகள் அல்லது அரசு உதவி செய்ய வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பாக உள்ளது.