மேலும் அறிய

தூத்துக்குடி-காச்சிகுடா நேரடி ரயில் சேவை: பயணிகளுக்கு காத்திருக்கும் புதிய வாய்ப்பு! முழு விபரம் இதோ!

புதிய ரயில் சேவை ஏப்ரல் 6ஆம் தேதி முதல் காச்சிகுடாவில் இருந்து இயக்கப்படும். அதேபோல் ஏப்ரல் 8ஆம் தேதி முதல் தூத்துக்குடியில் இருந்து இந்த ரயில் இயக்கம் தொடங்குகிறது.

தூத்துக்குடியில் இருந்து தெலங்கானா மாநில காச்சிக்குடாவிற்கு நேரடி ரயில் சேவை ஏப்ரல் 6ஆம் தேதி துவங்குகிறது. இதன் மூலம் தென் தமிழகத்திலிருந்து இருந்து ஹைதராபாத் பகுதிக்கு நேரடி பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தூத்துக்குடி மற்றும் காச்சிகுடா இடையே புதிய நிரந்தர வாராந்திர விரைவு ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. 17615 / 17616 என்ற எண் கொண்ட இந்த ரயில் சேவை மூலம் தமிழ்நாடு மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு இடையே நேரடி ரயில் இணைப்பு கிடைக்கிறது. இந்த சேவை தொடங்குவதற்கான கால அட்டவணையை தென் மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடி-காச்சிகுடா நேரடி ரயில் சேவை: பயணிகளுக்கு காத்திருக்கும் புதிய வாய்ப்பு! முழு விபரம் இதோ!

இந்த புதிய ரயில் சேவை ஏப்ரல் 6ஆம் தேதி முதல் காச்சிகுடாவில் இருந்து இயக்கப்படும். அதேபோல் ஏப்ரல் 8ஆம் தேதி முதல் தூத்துக்குடியில் இருந்து இந்த ரயில் இயக்கம் தொடங்குகிறது. இதன் மூலம் தென் தமிழ்நாட்டில் இருந்து ஹைதராபாத் பகுதிக்கு நேரடி பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

17615 என்ற எண் கொண்ட காச்சிகுடா – தூத்துக்குடி விரைவு ரயில் திங்கட்கிழமைகளில் மதியம் 3.00 மணிக்கு காச்சிகுடாவில் இருந்து புறப்படுகிறது. இந்த ரயில் ஷாட்நகர், ஜட்ஷெர்லா, மகபூப்நகர், வனபார்த்தி ரோடு, கட்வால், குர்னூல் சிட்டி, தோன், கூட்டி, அனந்தபூர், தர்மவரம், கடிரி, மதன்பள்ளி ரோடு, பிலேர், பகாலா, சித்தூர், காட்பாடி, வேலூர் கண்டோன்மெண்ட் வழியாக சென்று மறுநாள் காலை 7.28 மணிக்கு திருவண்ணாமலையை அடைகிறது.

அதனைத் தொடர்ந்து இந்த ரயில் விழுப்புரம் காலை 9.15 மணி, பரங்கிப்பேட்டை 9.49 மணி, கடலூர் துறைமுகம் 10.39 மணி, சிதம்பரம் 11.18 மணி, சீர்காழி 11.37 மணி, மயிலாடுதுறை மதியம் 1.03 மணி, கும்பகோணம் 2.10 மணி, பாபநாசம் 2.23 மணி, தஞ்சாவூர் 2.43 மணி மற்றும் திருச்சிராப்பள்ளி 4.55 மணிக்கு சென்றடைகிறது.பின்னர் திண்டுக்கல் மாலை 6.10 மணி, மதுரை 7.45 மணி, விருதுநகர் 8.23 மணி, சாத்தூர் 8.43 மணி, கோவில்பட்டி 9.03 மணிக்கு சென்றடைந்து, இறுதியாக இரவு 10.30 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்தை அடைகிறது.

தூத்துக்குடி-காச்சிகுடா நேரடி ரயில் சேவை: பயணிகளுக்கு காத்திருக்கும் புதிய வாய்ப்பு! முழு விபரம் இதோ!

17616 என்ற எண் கொண்ட தூத்துக்குடி – காச்சிகுடா விரைவு ரயில் புதன்கிழமைகளில் காலை 7.40 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படுகிறது. இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் கண்டோன்மெண்ட், காட்பாடி, சித்தூர், தர்மவரம், அனந்தபூர், குர்னூல் சிட்டி உள்ளிட்ட பல நிலையங்கள் வழியாக சென்று மறுநாள் காலை 11.00 மணியளவில் காச்சிகுடா ரயில் நிலையத்தை அடைகிறது.

இந்த புதிய ரயில் சேவை தொடங்குவதன் மூலம் தூத்துக்குடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து மதுரை, திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட நகரங்களுக்கு காலை நேரத்தில் வசதியான ரயில் இணைப்பு கிடைக்கிறது. மேலும் தெலங்கானா மாநில தலைநகர் பகுதிகளுக்கு நேரடி பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget