மேலும் அறிய

Duster 2026 Competitors: டஸ்டரை கசக்கும் போட்டியாளர்கள் - எந்த மாடல், எதில் பெஸ்ட் - ஒட்டுமொத்த கம்பேரிசன் இதோ?

Renault Duster 2026 Competitors: ரெனால்ட் டஸ்டர் கார் மாடலின் விலை அறிவிக்கப்பட்டதை அடுத்து, இந்திய சந்தையில் அந்த எஸ்யுவிக்கு நெருக்கடி தரக்கூடிய போட்டியாளர்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Renault Duster 2026 Rival: ரெனால்ட் டஸ்டர் கார் மாடலானது கடும் போட்டி நிலவும் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரெனால்ட் டஸ்டர் - நெருக்கும் போட்டியாளர்கள்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ரெனால்ட் டஸ்டரின் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம், 3 இன்ஜின் ஆப்ஷன்களில் 5 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ள இந்த காரின் விலை 10 லட்சத்து 49 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 18 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் வரையில் நீள்கிறது. டர்போ பெட்ரோல் இன்ஜின் எடிஷன்களின் விநியோகம் ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து, வரும் தீபாவளி முதல் டஸ்டரின் ஹைப்ரிட் எடிஷனின் விநியோகம் தொடங்கும் என ரெனால்ட் அறிவித்துள்ளது. மிகவும் போட்டித்தன்மை மிக்க விலை வரம்பில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மிட்சைஸ் எஸ்யுவி ஆனது, உள்ளூர் சந்தையில் ஹுண்டாய் க்ரேட்டா, டாடா சியாரா, கியா செல்டோஸ், மாருதி சுசூகி விக்டோரிஸ் மற்றும் மாருதி சுசூகி க்ராண்ட் விட்டாரா ஆகிய மாடல்களுடன் போட்டியிடுகிறது.

டஸ்டர் Vs போட்டியாளர்கள் - எது பட்ஜெட்டில் பெஸ்ட்?

மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் க்ரேட்டாவானது, ரூ.10.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற தொடக்கவிலையை கொண்டுள்ளது. இதை காட்டிலும் 30 ஆயிரம் ரூபாய் மலிவாகவே டஸ்டரின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சியாராவின் தொடக்க விலை ரூ.11.49 லட்சம், கியா செல்டோஸ் விலை ரூ.10.99 லட்சம், மாருதி சுசூகி விக்டோரிஸ் ரூ.10.50 லட்சம் மற்றும் க்ராண்ட் விட்டாரா ரூ.10.77 லட்சம் தொடக்க விலையாக கொண்டுள்ளன. அதாவது இந்த பிரிவில் உள்ள பல நேரடி போட்டியாளர்களை காட்டிலும், டஸ்டர் எஸ்யுவி மலிவு விலையிலேயே கிடைக்கிறது. எனவே, பட்ஜெட்டில் தரமான மிட்-சைஸ் எஸ்யுவி வாங்க விரும்புவோருக்கு டஸ்டர் நல்ல தேர்வாக இருக்கும்.


Duster 2026 Competitors: டஸ்டரை கசக்கும் போட்டியாளர்கள் - எந்த மாடல், எதில் பெஸ்ட் - ஒட்டுமொத்த கம்பேரிசன் இதோ?

டஸ்டர் Vs போட்டியாளர்கள் - மொத்த ஒப்பீடு இதோ

அம்சங்கள் ரெனால்ட் டஸ்டர் டாடா சியாரா ஹுண்டாய்  க்ரேட்டா கியா செல்டோஸ் மாருதி க்ராண்ட் விட்டாரா
நீளம் (மிமீ) 4,343 4,340 4,330 4,460 4,345
அகலம் (மிமீ) 1,813 1,841 1,790 1,830 1,795
உயரம் (மிமீ) 1,659 1,715 1,635 1,635 1,645
வீல் பேஸ் (மிமீ) 2,657 2,730 2,610 2,690 2,600
பூட் ஸ்பேஸ் (லிட்டர்) 518 622 433 447 373
க்ரவுண்ட் க்ளியரன்ஸ் (மிமீ) 212 205 190 200 210
முக்கிய இன்ஜின் ஆப்ஷன் 1.3 லிட்டர் டர்போ 1.5 லிட்டர் டர்போ 1.5 லிட்டர் டர்போ 1.5 லிட்டர் டர்போ 1.5 லிட்டர் ஹைப்ரிட்
ட்ரைவ்ட்ரெயின் FWD FWD FWD FWD FWD/AWD
விலை வரம்பு ரூ.10.49 - 18.49 லட்சம்  ரூ.11.5 - 21 லட்சம் ரூ.10.80 - 20.2 லட்சம் ரூ.11 - 20 லட்சம் ரூ.10.8 - 19.7 லட்சம்


Duster 2026 Competitors: டஸ்டரை கசக்கும் போட்டியாளர்கள் - எந்த மாடல், எதில் பெஸ்ட் - ஒட்டுமொத்த கம்பேரிசன் இதோ?

டஸ்டர் போட்டியாளர்களை விட எப்படி சிறந்தது?

டஸ்டர் Vs க்ரேட்டா: 2026 ரெனால்ட் டஸ்டர், ஹூண்டாய் க்ரேட்டாவிற்கு ஒரு கடினமான, ஆஃப்-ரோடு திறன் கொண்ட மாற்று ஆப்ஷனாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது மேம்பட்ட கிரவுண்ட் க்ளியரன்ஸ், ஹைப்ரிட் செயல்திறன் மற்றும் அதிக பயன்பாட்டுக்கு உகந்த வடிவமைப்பு ஆகியவற்றை கொண்டு முன்னிலை பெறுகிறது.

டஸ்டர் Vs சியாரா: புதிய ரெனால்ட் டஸ்டரானது சியாராவை காட்டிலும் மிகவும் வலிமையான, ஆஃப்-ரோட் பயணத்தை மையமாகக் கொண்ட ஒரு எஸ்யூவியாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் சியாராவானது ப்ரீமியம், சொகுசு பயணத்திற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது.  1.3L டர்போ இன்ஜின் மூலம் மேம்பட்ட செயல்திறன், 1.8L ஹைப்ரிட் ஆப்ஷன் மூலம் சிறந்த எரிபொருள் சிக்கனம் மற்றும் 700 லிட்டர் பூட் ஸ்பேஸ் மூலம் சியாராவிற்கு போட்டி அளிக்கிறது.

டஸ்டர் Vs செல்டோஸ்: உறுதியான வடிவமைப்பு, சிறந்த க்ரவுண்ட் க்ளியரன்ஸ், 4x4 திறன் மற்றும் அதிக இடவசதி கொண்ட காரை விரும்பினால், கியா செல்டோஸை விட புதிய செல்ரோஸ் நல்ல தேர்வாக இருக்கும். செல்டோஸ் காரானது ப்ரீமியம் மற்றும் தொழில்நுட்பம் நிறைந்த நகர்ப்புற ஸ்டைலிங்கில் கவனம் செலுத்துகிறது. டஸ்டர், மிகவும் உறுதியான செயல்திறனை வெளிப்படுத்தும் வடிவமைப்பை கொண்டுள்ளது.

டஸ்டர் Vs க்ராண்ட் விட்டாரா: 2026 ரெனால்ட் டஸ்டர் ஆனது அதிக செயல்திறன், பெரிய அளவீடுகள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள்  மற்றும் மிகவும் சக்திவாய்ந்த 1.3-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் மாருதி கிராண்ட் விட்டாராவை விட சிறந்ததாக உள்ளது. இதுபோக அதிகமான இடவசதி, 212 மிமீ க்ரவுண்ட் கிளியரன்ஸ்,  லெவல்-2 ADAS மற்றும் 18-இன்ச் வீல்கள் ஆகியவையும் டஸ்டரை சிறந்த தேர்வாக மாற்றுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Pulsar 150 Vs Apache RTR 160: பஜாஜ் பல்சர் 150-ஆ.? டிவிஎஸ் அப்பாச்சி 160-ஆ.? உங்க ஸ்டைலுக்கு எந்த பைக் பொருத்தமா இருக்கும்.?
பஜாஜ் பல்சர் 150-ஆ.? டிவிஎஸ் அப்பாச்சி 160-ஆ.? உங்க ஸ்டைலுக்கு எந்த பைக் பொருத்தமா இருக்கும்.?
புது அவதாரம் எடுக்கும் ஹோண்டா.. அறிமுகமாகியது Honda Elevate Facelift - விலை எவ்ளோ?
புது அவதாரம் எடுக்கும் ஹோண்டா.. அறிமுகமாகியது Honda Elevate Facelift - விலை எவ்ளோ?

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Embed widget