மேலும் அறிய

பான் கார்டு வைத்திருப்போர் உஷார்! ஆதார் இனி செல்லாது? 2026-ல் புதிய விதிமுறை: முக்கிய அறிவிப்பு!

ஆதாரில் உள்ள பிறந்த தேதி பல நேரங்களில் தோராயமாக பதிவு செய்யப்படுவதால், நிதி சார்ந்த ஆவணமான பான் கார்டுக்கு அது செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பான் கார்டு விண்ணப்பிப்பவர்களுக்கும், திருத்தம் செய்பவர்களுக்கும் வருமான வரித்துறை ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. அது ஆதார் என்பது அடையாளச் சான்று தானே தவிர, அது பிறந்த தேதிக்கான அத்தாட்சி கிடையாது என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2026-ன் புதிய விதிமுறைகளின்படி, தாங்கள் பான் கார்டு பெற வேண்டுமென்றால் ஆதாரை தவிர வேறு என்னென்ன ஆவணங்கள் கைவசம் இருக்க வேண்டும்?  என விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

பான் கார்டு வைத்திருப்போர் உஷார்! ஆதார் இனி செல்லாது? 2026-ல் புதிய விதிமுறை: முக்கிய அறிவிப்பு!

ஆதார் வழங்க தொடங்கிய காலத்திலிருந்து, அது ஒரு அடையாளச் சான்று (Identity Proof) மற்றும் முகவரிச் சான்று (Address Proof) மட்டுமே தவிர, பிறந்த தேதிக்கான சான்று அல்ல என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) கூறி வருகிறது. இந்தநிலையில் சமீபத்தில் வருமான வரித்துறை மற்றும் UIDAI ஆகியவை இணைந்து இந்த விதியை இன்னும் கடுமையாக்கியுள்ளன. ஆதாரில் உள்ள பிறந்த தேதி பல நேரங்களில் தோராயமாக பதிவு செய்யப்படுவதால், நிதி சார்ந்த ஆவணமான பான் கார்டுக்கு அது செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஆதார் கார்டை தாங்கள் பான் கார்டுக்கு பயன்படுத்தவே முடியாது என்று அர்த்தமல்ல. உங்களுடைய பெயரை உறுதிப்படுத்தவும், முகவரியை உறுதிப்படுத்தவும் உதவும். ஆனால் பிறந்த தேதி (DOB) என்று வரும்போது மட்டும், ஆதார் அல்லாத வேறு ஒரு ஆவணத்தை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

பான் கார்டு வைத்திருப்போர் உஷார்! ஆதார் இனி செல்லாது? 2026-ல் புதிய விதிமுறை: முக்கிய அறிவிப்பு!

ஆக பான் கார்டு விண்ணப்பிக்கும் போது பிறந்த தேதிக்காக, பிறப்புச் சான்றிதழ் அல்லது 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, அரசு ஊழியராக இருந்தால் பணி அடையாள அட்டை உள்ளிட்டவற்றை காண்பித்து கொள்ளலாம். ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் மாற்றத்தின் படி, பான் கார்டில் உள்ள விவரங்களும் ஆதாரில் உள்ள விவரங்களும் (பெயர், பாலினம் போன்றவை) சரியாக பொருந்த வேண்டும். ஆனால் பிறந்த தேதியை உறுதிப்படுத்த மட்டும் மேலே குறிப்பிட்ட மாற்று ஆவணங்கள் கட்டாயம் தேவைப்படும். எனவே இனி பான் கார்டு புதிதாக விண்ணப்பிக்கவோ அல்லது திருத்தம் செய்யவோ சென்றால் கட்டாயம் மேற்கண்ட மாற்று ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.

தலைப்பு செய்திகள்

ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
SC On CJP: மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!
ரயில்வேயில் புதிய புரட்சி: TTE-க்களுக்கு பாடி கேமரா - முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி!
ரயில்வேயில் புதிய புரட்சி: TTE-க்களுக்கு பாடி கேமரா - முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
Samsung Silicon-Carbon Battery: சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
iPhone 17 Price Hike: மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
Embed widget