மேலும் அறிய

TVK Candidate List: விஜய் முதல் ஆதவ் வரை.. சென்னையை தவெக டார்கெட் செய்தது ஏன்? ஓர் அலசல்

தவெக தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் சென்னையில் போட்டியிடுவதற்கான காரணங்கள் என்ன? என்பதை கீழே காணலாம்.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தலில் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள அரசியல் கட்சி தமிழக வெற்றிக் கழகம்.

சென்னையில் கும்பலாக களமிறங்கிய தவெக:

ரசிகர்கள் பலத்தை நம்பி களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்றி வரும் விஜய், இந்த தேர்தலில் தனித்தே களமிறங்க உள்ளார். விஜய் இந்த தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் மட்டுமின்றி அக்கட்சியின் முக்கிய தலைவர்களாக கருதப்படும் புஸ்ஸி ஆனந்த் தி.நகரிலும், ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்திலும், வெங்கடராமன் மயிலாப்பூரிலும், ஜேசிடி பிரபாகர் ஆயிரம் விளக்கிலும், மரிய வில்சன் ஆர்கே நகரிலும் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்மோகன் எழும்பூரில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாக்காளர்கள் எண்ணிக்கை:

தவெக-வின் முக்கிய தலைவர்கள் அனைவரும் சென்னையை குறிவைத்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. சென்னை தற்போது திமுக-வின் கோட்டையாக உள்ளது. சென்னையில் மட்டும் 28 லட்சத்து 31 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் சென்னை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் எந்த சமூகத்தினர் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்களோ, அவர்களுக்கே பெரும்பாலும் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் இதை செய்து வருகின்றனர். அதற்கு காரணம் பெரும்பான்மை சமுதாய வாக்குகளை கைப்பற்றி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணமே காரணம் ஆகும்.

சென்னையில் இறங்குவது ஏன்?

ஆனால், சென்னையைப் பொறுத்தமட்டில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட மக்களும் இணைந்து வாழும் ஒரு மாவட்டம் ஆகும். இங்கு சென்னையைப் பூர்வீகமாக கொண்டவர்களுடன் வெளிமாவட்டத்தினரும் இங்கு குடிபெயர்ந்து வசித்து வருகிறார்கள். பல தரப்பட்ட சமுதாயத்தினரும் இணைந்து வசித்து வரும் இந்த சென்னையில் வாக்காளர்கள் வேட்பாளர்களின் சமுதாயம் பார்த்து வாக்களிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவு ஆகும். 

மேலும், சென்னையில் நடிகர் விஜய்யின் ரசிகர்களின் எண்ணிக்கையும், தவெக-வின் உறுப்பினர் எண்ணிக்கையும் அதிகளவு இருக்கிறது. இதனால், சென்னையை குறிவைத்து களமிறங்கினால் சாதி வாக்கு வங்கியில் இருந்து தப்பிக்கலாம் என்று தவெக-வினர் சென்னையை குறிவைத்துள்ளனர். 

விஜய்க்கு பலமா?

தவெக தலைவர் விஜய் போட்டியிடுவார் என்று கருதப்படும் பெரம்பூர் தொகுதி சென்னையிலே அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி ஆகும். இந்த தொகுதியில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 792 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 14 ஆயிரத்து 726 பேர் உள்ளனர்.  ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 7 ஆயிரத்து 995 பேர் உள்ளனர். 3ம் பாலினத்தவர் 71 பேர் உள்ளனர். பெண் ரசிகைகளை அதிகளவு கொண்ட காரணத்தாலே விஜய் பெரம்பூரைத் தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget