மேலும் அறிய

TN Election: தமிழ்நாட்டில் கடைசியாக சுயேச்சை வேட்பாளர் வென்றது எப்போது? மேஜிக் நடந்தது எப்படி? டிடிவி ஆ?

TN Election 2026: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் கடந்த 2 தசாப்தங்களில் ஒரு சுயேச்சை வேட்பாளர் கூட, எம்.எல்.ஏ-வாக தேர்வாகவில்லை என்பது வரலாறாக நீள்கிறது.

TN Election 2026: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் கடைசியாக கடந்த 2006ம் ஆண்டு, ஒரு சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்று பலரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026:

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இந்த முறை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் விஜயின் தவெக என நான்கு முனை போடி நிலவுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு போன்ற முக்கிய பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஆனால், தேர்தலில் இந்த பிரதான கட்சிகள் மட்டுமே வேட்பாளர்களை களமிறக்குவதில்லை. மக்களுக்கு சேவை செய்யும் எண்ணத்துடன் சிலரும், விளம்பரத்திற்கான சிலரும் என பல்வேறு சுயேச்சை வேட்பாளர்களும் களமிறங்குகின்றனர். ஆனால், அவர்களுக்கான வெற்றி என்பது மிகவும் அரிதானதாகவே உள்ளது. அதில் தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. கடந்த 20 ஆண்டுகளில் ஒரு சுயேச்சை வேட்பாளர் கூட மாநில சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெறதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

20 ஆண்டுகளில் ஒரு சுயேச்சை கூட வென்றதில்லை..

கடந்த 2011, 2016 மற்றும் 2021 ஆகிய சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் நூற்றுக்கணக்கான சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தலில் களமிறங்கினாலும், திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வெற்றி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதற்கு முன்பாக 2006ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுதேர்தலில் ஒரே ஒரு சுயேச்சை வேட்பாளர் மட்டும் வெற்றி பெற்று, ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்தார். அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதியில் வென்ற T. ராமச்சந்திரன் ஆவார். இவரது வெற்றிக்குப் பிறகு எந்தவொரு சுயேச்சைக்கும் கிடைக்காத பெருமை, 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலிலாவது யாருக்காவது கிடைக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

யார் இந்த T. ராமச்சந்திரன்? தளி தொகுதி சுயேச்சை

கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் தளி தொகுதியில் டி. ராமச்சந்திரன் சுயேச்சையாக போட்டியிட்டு, திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகராஜ ரெட்டியை, சுமார் 4 ஆயிரத்து 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டில் பயணித்து வந்த ராமச்சந்திரன், தலைமையை விமர்சித்து கட்சியில் இருந்து விலகி பிறகு, அந்த தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலேயே தன்னை இணைத்துக்கொண்டு, 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அதே தளி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 2016ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றியை தவறவிட்டாலும், 2021ம் ஆண்டு தேர்தலி தளி தொகுதியிலிருந்து மூன்றாவது முறையாக ராமச்சந்திரன் சட்டமன்றத்திற்கு தேர்வானது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன்பாக 1980ம் ஆண்டு அதிமுகவின் ஆதரவுடன் 11 வேட்பாளர்கள் சுயேச்சையாக களமிறங்கி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

11 ஆண்டுகளுக்குப் பிறகு டிடிவி..

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் டி. ராமச்சந்திரனுக்குப் பிறகு எந்தவொரு சுயேச்சை வேட்பாளரும் வென்றதில்லை என்ற வரலாறு இன்றளவும் நீடிக்கிறது. அதேநேரம், 2017ம் ஆண்டு சென்னை ஆர்.கே. நகரில் நடைபெற்ற இடைதேர்தலில் சுயேச்சையாக களமிறங்கிய டிடிவி தினகரன், அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களை அடுத்தடுத்த இடங்களுக்கு தள்ளி, சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தினார். இதன் மூலம், ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் கடைசியாக வென்ற சுயேச்சை வேட்பாளர் என்ற பெருமையை டிடிவி தினகரன் தன் வசப்படுத்தியுள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Embed widget