“ஏய் அமைதியா இருங்க டா”அடிக்க கை ஓங்கிய திருமா விசிகவினர் இடையே அடிதடி | Thiruma Attack VCK Cadre
புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு திருமாவளன் வந்த போது விசிகவினர் மத்தியில் கடுமையான கைகலப்பு ஏற்பட்டது. அவர்களை தடுக்க முடியாத நிலையில் கோபமான திருமாவளவன் விசிக நிர்வாகியை கை ஓங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் திருமாவளவன் நிகழ்ச்சிக்கு வந்த நேரத்தில் திடீரென கூட்டத்தில் இருதரப்பு விசிகவினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது. இந்த வாக்குவாதம் ஒருசில நிமிடங்களிலேயே கைகலப்பாக மாறியது. இருதரப்பு தொண்டர்களும் ஒருவர்மீது ஒருவர் ஆவேசமாக மோதிக்கொண்டனர்.
கட்சியின் தலைமை நிர்வாகி ஒருவர் முன்னிலையிலேயே இந்த மோதல் நடந்ததால், மேடையில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இந்தச் சண்டையைக் கண்ட திருமாவளவன் உடனடியாகக் குறுக்கிட்டு அவர்களை விலக்கி சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், தொண்டர்கள் தொடர்ந்து மோதிக்கொண்டிருக்கவே, திருமாவளவனுக்குக் கடும் கோபம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் ஆவேசத்தின் உச்சிக்குச் சென்ற திருமாவளவன் அவர்கள், சண்டையிட்ட ஒரு தொண்டரை நோக்கி, அவர்களை எச்சரிக்கும் விதமாக ஆவேசமாகக் கையை ஓங்கினார். இந்த சம்பவமானது ஒட்டுமொத்த கூட்டத்தையும் உறைந்துபோக செய்தது. இதன் வீடியோ காட்சிகள் சமூக வளைதளங்களில் காட்டுத்தீ போல்ப் பரவி வருகிறது.
அன்மையில் விசிகவினர் வழக்கறிஞரை தக்கியது பெரும் சர்ச்சையான நிலையில், தற்போது விசிக தலைவர் திருமாவளவன் விசிக நிர்வாகியை அடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















