மேலும் அறிய

VK Sasikala: கருணாநிதி சூழ்ச்சி.. ஜெயலலிதாவோடு மாட்டி விட்டுட்டாரு.. சசிகலா வேதனை!

பிற்காலத்தில் ஜெயலலிதாவுக்கு பின்னால் இந்த பெண் அதிமுகவுக்கு தலைமையாக வரக்கூடும் என 1996ல் கருணாநிதி கணித்தார். அதனால் தான் என்னை சொத்து குவிப்பு வழக்கில் இணைத்து விட்டார் என சசிகலா குறிப்பிட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்புடைய வழக்குகளில் தான் வேண்டுமென்றே சிக்க வைக்கப்பட்டதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். 

அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக அறியப்பட்ட சசிகலா, அவரது மறைவுக்குப் பின் அதிமுகவின் தலைமையாக வந்தார். ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கு தண்டனை, கட்சிக்குள் ஏற்பட்ட நிகழ்வு போன்றவை காரணமாக அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். 5 ஆண்டுகாலம் பொறுமையாக இருந்த அவர், தற்போது கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். பெயர் அறிவிக்கப்படாத நிலையில், கொடி மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற சசிகலாவிடம், “நீங்கள் அரசு ஊழியர் கிடையாது.  ஆனால் மிகப்பெரிய அளவில் சொத்து சேர்த்து வைத்துள்ளீர்கள். ஜெயலலிதாவோடு இருந்த தொடர்பை பயன்படுத்தி இன்றளவும் செல்வாக்கான வாழ்க்கை வாழ்ந்து வருகிறீர்கள் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே?”என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த அவர், “ இது திட்டம் போட்டு வெளியில் இருந்து பரப்பப்படும் விஷயமாகும். ஜெயலலிதா 1991-1996ம் ஆண்டு காலக்கட்டத்தில் முதலமைச்சராக இருந்தார். அப்போது ரூ.1 சம்பளம் பெறுவேன் என கூறியதையே கொச்சைப்படுத்தினார்கள். 1 ரூபாய் வாங்கி என்ன பண்ணுவாங்க என தெரிவித்தார்கள். நாங்கள் ஜெயலலிதா முதலமைச்சராவதற்கு முன்னால் சில நிறுவனங்களை நடத்தி வந்தோம். அதில் வரும் வருமானத்தை வைத்து செலவு செய்து வந்தோம். 

அப்போது திமுக அரசு 13 வழக்குகள் போட்டது. அதற்கு உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என இரண்டுக்கும் வழக்கு நடத்த பணம் செலவழிக்க வேண்டும். இதற்கான பணம் எங்கள் நிறுவனங்களில் இருந்து தான் சென்றது. வருமான வரித்துறை தாக்கலில் எதற்கெல்லாம் நாங்கள் கொடுத்திருக்கிறோம் என்பது தெரியும். நான் ஒரு அரசு ஊழியர் கிடையாது. தனிப்பட்ட நபர். நான் ஒரு நிறுவனத்தை நடத்தக்கூடாது என எப்படி சொல்ல முடியும்?. இன்றைக்கு திமுகவைச் சேர்ந்தவர்கள் தனியாக தொழில் செய்யவில்லை என சொல்லுங்கள் பார்க்கலாம். 

பிற்காலத்தில் ஜெயலலிதாவுக்கு பின்னால் இந்த பெண் அதிமுகவுக்கு தலைமையாக வரக்கூடும் என 1996ல் கருணாநிதி கணித்தார். அதனால் தான் என்னை இந்த வழக்கில் இணைத்து விட்டார். ஒரு அரசு ஊழியர் ஊழல் செய்து விட்டார் என வழக்கு தொடர்ந்தால் அவர்கள் குடும்பத்தில் இருப்பவர்களும் சிக்க வைக்கப்படலாமா?, குடும்ப உறுப்பினர்களால் தனியாக சம்பாதிக்க முடியாதா?

நான் நடத்திய நிறுவனங்கள் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வரவு -செலவுகளை மேற்கொண்டோம். யாருக்கும் இப்படி வழக்கு போடவில்லை. இவை அனைத்தும் திட்டமிட்டு செய்யப்பட்டவை. சசிகலா உடன் இருப்பதால் தான் இவ்வளவு சிக்கல். இல்லாவிட்டால் திமுக தனிக்காட்டு ராஜா மாதிரி இருந்திருக்கலாம் என கருணாநிதி நினைத்தார்" என சசிகலா கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

R. B. Udhayakumar : ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
ஜனநாயகன் படம் வெளியீட்டிற்கு அரசு விடுமுறையா.? அமைச்சர் புஸ்ஸி ஆனந்தை போட்டுத்தாக்கும் ஆர்.பி.உதயகுமார்
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
R S Bharathi :
"விஜய்க்கு ஆபத்து வந்தா... அதுக்குக் காரணம் ஆதவ் அர்ஜுனாதான்!" -அலர்ட் செய்யும் ஆர்.எஸ்.பாரதி

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!
NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!
இன்னோவை இடித்து தள்ளிய 7 சீட்டர் பெஸ்ட் செல்லர் MPV; ஜூனில் அமோக விற்பனை- எந்த கார் தெரியுமா?
இன்னோவை இடித்து தள்ளிய 7 சீட்டர் பெஸ்ட் செல்லர் MPV; ஜூனில் அமோக விற்பனை- எந்த கார் தெரியுமா?
Embed widget