Sengottaiyan | டார்கெட் எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையனுக்கு support! அமித்ஷா பிரம்மாஸ்திரம்
எடப்பாடி பழனிசாமி நிகழ்வை செங்கோட்டையன் புறக்கணித்த நிலையில், எடப்பாடியின் மாஸை குறைத்து செங்கோட்டையனை வைத்து அதிமுகவை தங்கள் பக்கம் திருப்பவதற்கு பாஜக திட்டம் தீட்டி வருவதாக கூறப்படுவது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் செங்கோட்டையனை முதலமைச்சராக்க முயற்சிகள் நடைபெற்றது. கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும் அதிமுகவின் மூத்த நிர்வாகி என்பதாலும் அவருக்கு இந்த வாய்ப்பு வந்தது. ஆனால் அவர் இதை மறுக்கவே எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றார். இப்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி இருக்கும் சூழலில், செங்கோட்டையனுக்கு அக்கட்சியில் முக்கியத்துவம் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் வரும் 2026 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க பாஜக திட்டம் தீட்டி வருகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி இதற்கு அசைந்து கொடுக்கவில்லை. இதனால் அதிமுகவில் எடப்பாடியின் பவரை குறைக்கும் மற்றொரு முகத்தை பாஜக தேடியது. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவரும், கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவருமான செங்கோட்டையனை வைத்து எடப்பாடியின் இமேஜை உடைக்க பாஜக திட்டம் தீட்டிவருவதாக சொல்லப்படுகிறது.
தற்போது உள்ள சூழலில் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பலரும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கவே விரும்புகின்றனர். ஆனால் இதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மட்டும் தான். இதனால் அதற்கு எதிராக அதிமுகவில் ஒருவர் இருந்தால் அது தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று பாஜக நினைப்பதாக கூறப்படுகிறது. அதற்கு சரியான சாய்ஸ் செங்கோட்டையன் தான்.
அவருக்கு அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளின் ஆதரவு இருக்கிறது. எடப்பாடியை தவிர்த்து செங்கோட்டையனை அதிமுகவின் முகமாக மாற்றினால் இதன் மூலம் 2026 ஆம் ஆண்டு அதிமுகவுன் பாஜக கூட்டணி அமைக்கு எளிமையான வழி ஏற்படும் என்றும் பாஜக தரப்பு நினைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.





















