மூர்த்தி மனைவிக்கு பதவி? போர்க்கொடி தூக்கும் மா.செ-க்கள் மதுரை திமுக சலசலப்பு | Mayor | Madurai | MK Stalin | PTR vs Moorthy
அமைச்சர் பிடிஆர் தாயாரிடம் இருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பதவியை தனது மனைவிக்கு கொண்டுவருவதற்கான வேலைகளில் அமைச்சர் மூர்த்தி இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு மதுரை மாவட்ட திமுகவினரே கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருவதாக கூறப்படுகிறது.
மதுரை திமுகவில் அண்மைக்காலமாகவே உட்கட்சி கோஷ்டி பூசல் தொடர்கதையாக இருக்கிறது. அதாவது அமைச்சர் பிடிஆர் தரப்பு ஒரு புறமும்,அமைச்சர் மூர்த்தி தரப்பு ஒரு புறமும் செயல்பட்டு வருகின்றனர். அதேபோல், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி, மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன் தரப்பு ஒருபுறம் என நான்கு கோஷ்டிகளாக பிரிந்து திமுகவின் செயல்பட்டு வருகிறது. இது தலைமைக்கு பெரும் இடையூறாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் திமுகவிக்கு பின்னடைவுதன் என்றும் சொல்கின்றனர்.
இச்சூழலில் தான் அண்மையில் மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகத்தை அமைச்சர் மூர்த்தி விரிவாக்கம் செய்வதற்காக, மதுரை தெற்கு மற்றும் மாநகர் மாவட்டத்தை டம்மியாக்கும் வகையில் நிர்வாகத்தை பிரித்து அதில் தனது ஆதரவாளர்களை நிர்வாகிகளாக நியமித்தார். இதனால் மூர்த்தி மீது மற்ற மாவட்டச் செயலாளர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக இருக்கும் அமைச்சர் பிடிஆரின் தாயார் ருக்மணியின் பதவிக்காலம் வரும் 29 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனிடையே தனது மனைவி செல்லம்மாளை அந்த பொறுப்பிற்கு கொண்டு வருவதற்கான வேலைகளில் அமைச்சர் மூர்த்தி தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் மூர்த்தியின் செயல்பாட்டை மதுரை மாவட்ட திமுகவினரே ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சொல்கின்றனர்.அதேபோல், எக்காரணத்தை கொண்டும் அமைச்சர் மூர்த்தியின் மனைவி செல்லம்மாளுக்கு அந்த பொறுப்பை வழங்க கூடாது என மதுரை மாவட்ட திமுக நிர்வாகிகளே போர்க்கொடி தூக்கி வருகின்றார்களாம். இது தொடரபாக மதுரை திமுக வட்டாரங்களில் ,தவெகவிற்கு போட்டியாக மதுரையில் திமுக பொதுக்குழுவை சிறப்பாக நடத்தியன் மூலம் கட்சி மேலிடத்திடம் மூர்த்தி பாராட்டை பெற்றார். உதயநிதியின் பாரட்டையும் பெற்று தற்போது அதிகார தோராணையில் நடக்கிறார். அதேபோல், 10 தொகுதிகளிலும் வேட்பாளர் தேர்வு, செலவு என எல்லாவற்றையும் அவரே செய்யவிருப்பதால் இது போல் செயல்படுகிறார் என்றும் கூறுகின்றனர். இப்படி மதுரை திமுகவில் கோஷ்டி பூசல் உச்சத்தை அடைந்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.





















