Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்.. எதிர்க்கும் விசிக, காங். , CPM தலைவலியில் திமுக தலைமை!
ஈரோடு இடைத்தேர்தல் வரும் நேரத்தில் கூட்டணிக்குள் இருக்கும் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் திமுகவிற்கு எதிராக குரல்கொடுத்து வருவது அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே திமுக கூட்டணிக்குள் இருக்கும் விசிக, கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சிகள் திமுகவிற்கு எதிரான கருத்துகளை பதிவு செய்து வருகின்றன. அண்மையில் கூட கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் கே. பாலகிருஷ்ணன் ஆளும் அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். தமிழ்நாட்டில் போராட கூட உரிமையில்லையா? இங்கு என்ன அவசர நிலையை பிரகடன படுத்தியுள்ளீர்களா என்று கேட்டார். மற்ற மாடல்களுக்கு எல்லாம் எதிராய் கம்யூனிச மாடல் நாம் கொண்டு வர வேண்டும் என்று கூறினார். அவரது இந்த பேச்சு திமுக கூட்டணிக்குள் கடும் எதிர்ப்பை கிளப்பியது. எந்த அளவிற்கு என்றால் திமுக நாளேடான முரசொலி கண்டிக்கும் அளவிற்கு....
இது ஓய்ந்த சில நாட்களில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ ராசா, கம்யூனிஸ்ட்கள் எல்லாம் சுயநலவாதிகள் என்று சொல்ல கோவத்தின் உச்சிக்கு சென்ற கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாலர் பெ சண்முகம், ஆ ராசாவின் இந்த பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. அடிப்படை ஆதரமற்ற கருத்து என்று விளாசினார். இப்படி ஒரு புறம் திமுகவிற்கும் - கம்யூனிஸ்ட்களுக்கும் பனிப்போர் நடந்து கொண்டிருக்க... காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் நேற்று,”பாஜக சபாநாயகர் ஓம்பிர்லா வழியில் தமிழக சட்டமன்றம் நடைபெறுகிறதா? என்று கேள்வி எழுப்பியது கூட்டணிக்குள் அடுத்த குழப்பத்தை உருவாக்கியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மறுபுறம் விசிகாவும் குடைச்சல் கொடுத்துவருவதாக கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளே திமுகவுக்கு எதிராக தொடர்ந்து பேசு வருவது அக்கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.