(Source: Poll of Polls)
Bihar Election | NDA கூட்டணியில் சலசலப்பு நிதிஷ்குமாரை ஒதுக்கும் பாஜக? அதிருப்தியில் JDU நிர்வாகிகள்
பீகாரில் பெரியண்ணாவாக இருந்த நிதிஷ்குமார் பாஜகவால் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்ப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. 243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட இங்கு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 தேதி அன்று வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது அங்கு முதலமைச்சராக இருப்பவார் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் தான். இவர் மீண்டும் முதலமைச்சராகிவிட வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறார். இச்சூழலில் தான் நேற்று முன் தினம் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி என்பது தொடர்பான தகவல் வெளியாகியது. அதில் பாஜக 101 தொகுதிகளிலும் அதேபோல் ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளிலும் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 29 தொகுதிகளிலும், உபேந்திரா குஷ்வேகா தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா மற்றும் ஜிதன் ராம் மாஞ்சி தலைமையிலான ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா தலா 6 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இச்சூழலில் தான் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் பாஜக மீது குற்றம் சாட்டா ஆரம்பித்து விட்டனர். அதாவது NDA கூட்டணியின் தொகுதி பங்கீடு JDU கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்கின்றனர். அதாவது நிதிஷ் குமாரின் உடல் நலம் குறித்து அக்கட்சியினர் கவலை படுவதாகவும் கூறிவருகின்றனர். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்தே எங்கள் கட்சிக்கு அதிக இடம் ஒதுக்கப்டும் என்றும் JDU கட்சி நிர்வாகிகள் கூறிவந்தனர். 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஜேடியு மற்றும் பாஜக இரு கட்சிகளும் தலா 17 இடங்களில் போட்டியிட்டன. அதற்கு முன்பு, 2009 மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ஜேடியு 25 இடங்களிலும் பாஜக 15 இடங்களிலும் போட்டியிட்டன. ஆனால் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஜேடியு 16 இடங்களிலும் பாஜக 17 இடங்களிலும் போட்டியிட்டது. அப்போது நிதிஷ்குமாரின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாக சொல்லபடுகிறது. அதேபோன்று, 2020 சட்டமன்ற தேர்தலில் ஜேடியு 115 இடங்களிலும் பாஜக 110 இடங்களிலும் போட்டியிட்டன. அந்த தேர்தலில் ஜேடியு மூன்றாவது இடத்தைப் பிடித்தது, ஆனாலும் நிதிஷ் குமார் முதலமைச்சரானார். இச்சூழலில் தான் இந்த முறை இரண்டு கட்சிகளுக்கும் சமமான இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளாதல் ஜேடியு கட்சியினர் கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லபடுகிறது.





















