Armstrong Murder : ஆம்ஸ்ட்ராங் - 16வது நாள்..பழிக்கு பழி தீர்க்க சபதம்!உளவுத்துறை ஹை அலர்ட்!
16வது நாள் காரியம் நடப்பதற்குள் ஆம்ஸ்ட்ராங் மரணத்திற்கு பழிக்கு பழி தீர்க்க முடிவு செய்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து, காவல்துறை ஃபுல் அலர்ட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது...
அண்மையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ரவுடி கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 11 பேர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கொலையில் தொடர்புடைய ரவுடி திருவெங்கடம், பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து காட்டுவதற்காக சென்ற போது காவல்துறையால் எண்கவுண்டர் செய்யபட்டார்.
இந்நிலையில் அடுத்து அடுத்து நடந்த விசாரணையில் திமுக, அதிமுக, பாஜக நிர்வாகிகள் சிக்கினர்.
இப்படிபட்ட சூழலில் தான் ஆம்ஸ்ட்ராங்கிற்க் 16வது நாள் காரியம் நடப்பதற்குள், கொலையில் சம்பந்தபட்ட யாரேனும் ஒருவருக்கு நெருங்கியவர்களை தீர்த்துகட்ட ஒரு கும்பல் சபதம் எடுத்து திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது..
இதன் காரணமாக தமிழகத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான வழக்கில் மேற்கொண்டு இனி எந்த தலைகளும் உருள கூடாது என்பதில் உறுதியாக உள்ள காவல்துறை, ஹை அலர்ட்டில் உள்ளது..
ஏற்கனவே சென்னை கமிஷ்னராக அருண் IPS பொறுப்பேற்ற பின், இரவில் குற்றபின்னணி உடையவர்களின் வீடுகளுக்கு சென்று விசிட் அடிப்பது, அவர்களது குடும்பத்தின்ரை சந்தித்து அறிவுறுத்தல் வழங்குவது என ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்த பட்டுள்ளனர்.
மேலும் ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தொடர்புடைய அனைவரின் வீடுகள், வெளியே இருக்கும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் காவல்துறையின் ரேடாரில் உள்ளனர். அவர்களின் மூவ்மெண்டை காவல்துறையினர் கண்கானித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.