”EX IPS-னு போடுங்க போதும்” பாஜகவை ERASE செய்த அண்ணாமலை? டெல்லி மீட்டிங் TO அறிக்கை
பாஜகவை குறிக்கும் எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் EX IPS என்று மட்டும் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார் அண்ணாமலை. சில காரணங்களால் தலைமை மீது அப்செட்டில் இருக்கும் அண்ணாமலை தற்போது அதனை வெளிப்படையாகவே காட்ட ஆரம்பித்துள்ளாராம். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அமித்ஷா முக்கிய முடிவு ஒன்றை எடுக்கவிருப்பதாக பேச்சு அடிபடுகிறது.
கோவையில் நிலம் வாங்கியது தொடர்பாக அண்ணாமலை மீது விமர்சனங்கள் குவிந்தன. இந்தநிலையில் அதற்கு விளக்கம் கொடுத்து அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் நிலம் வாங்கியது உண்மைதான். என்னுடைய மற்றும் என் மனைவியின் சேமிப்பு மற்றும் கடனை வைத்து தான் வாங்கினேன். அந்தக் கடனுக்கான மாதாந்திர வட்டியையும் 2 மாதங்களாக செலுத்தி வருகிறேன். நான் வாங்கிய முதல் மற்றும் ஒரே அசையா சொத்து இதுதான் என விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்த அறிக்கையில் பாஜக தொடர்பான எந்த அடையாளத்தையும் பயன்படுத்தாமல் தன்னை EX IPS என்று மட்டுமே அண்ணாமலை குறிப்பிட்டுள்ளது விவாதமாக மாறியுள்ளது. அதிமுக பாஜக கூட்டணி அமையும் போதே பாஜக மாநில தலைவர் பதவியும் அண்ணமலையிடம் இருந்து பறிக்கப்பட்டது. அப்போதே அண்ணாமலையின் திறமையை தேசிய கட்டமைப்பில் பாஜக பயன்படுத்தும் என அறிவித்தார் அமைச்சர் அமித்ஷா. நயினார் நாகேந்திரனின் பதவியேற்பு விழாவில் வைத்தே அண்ணாமலைக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டது.
ஆனால் அதன்பிறகு அண்ணாமலைக்கு எந்த பதவியும் கிடைக்கவில்லை. ஆந்திர பிரதேசத்தில் இருந்த எம்.பி சீட்டுக்கு குறிவைத்து காய் நகர்த்திய அண்ணாமலைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மாநில தலைவராக இருந்த போது ஆக்டிவ்வாக இருந்த அண்ணாமலை சைலண்ட் மோடுக்கு போனார். அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-ஐ விமர்சித்து விட்டு மீண்டும் கூட்டணி வைத்தது ஏன் என கேள்வி கேட்ட போது கூட கட்சியின் தலைமையும், தலைவர்களும் எடுத்திருக்கும் முடிவை செயல்படுத்துவது எனது கடமை என ஒரே போடாய் போட்டார்.
அண்ணாமலை பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருந்தாலும் தலைமைக்கு கட்டுப்பட்டு தான் அமைதியாக இருக்கிறாரா என்ற கேள்வி வந்தது. சமீப நாட்களாக அதிருப்தியை வெளிக்காட்டும் விதமாகவே அண்ணாமலையின் நடவடிக்கைகள் இருக்கின்றன. தமிழக பாஜக முக்கிய புள்ளிகளுடன் டெல்லியில் அமைச்சர் அமித்ஷா தனது இல்லத்தில் மீட்டிங் ஒன்றை நடத்தினார். அதிலும் அண்ணாமலை கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். அதிலும் அதிகமான திருமண நிகழ்வுகள் மற்றும் வேலைகள் இருப்பதால் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என அண்ணாமலை சொன்னது கூடுதல் சந்தேகத்தை கிளப்பியது.
அதேபோல் இன்று நடந்த குடியரசு துணைத் தலைவராக சிபி ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழாவிலும் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை. இப்படி பாஜக தலைமை மீதான அதிருப்தியை அண்ணாமலை வெளிக்காட்டி வருவதாக சொல்கின்றனர்.
அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குவதற்கான ஐடியாவில் தான் பாஜக தலைமையிடம் இருந்து விலகுவதாக பேச்சு அடிபடுகிறது. அவர் விஜய்யுடன் சேர்ந்து கைகோர்ப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் பேச்சு இருக்கிறது. ஆனால் வருங்காலத்தில் பாஜகவில் அவருக்கு நிறைய முக்கிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளதால் தனிக்கட்சி தொடங்குவதற்கான சாத்தியம் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த பிரச்னையை சரிகட்டுவதற்காக அமைச்சர் அமித்ஷா அண்ணாமலையிடம் தேசிய பொறுப்பு ஒன்றை சீக்கிரம் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளதாகவும் அதற்கான ஆலோசனை நடந்து வருவதாகவும் தெரிகிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அமித்ஷா, அண்ணமலைக்கு தேசிய பொறுப்பு வழங்கப்படும் என மீண்டும் தெரிவித்துள்ளார்.





















