"விஜய்க்கு தைரியம் ஜாஸ்தி! அரசியல் EASY கிடையாது” SUPPORT-க்கு வந்த அஜித்
அரசியலுக்கு வர்றதுலாம் ரொம்ப தைரியமான முடிவு என விஜய்க்கு சப்போர்ட் ஆக பேசியுள்ளார் நடிகர் அஜித். விஜய்யின் அரசியல் எண்ட்ரிக்கு பிறகு அஜித் பேசியுள்ள சில விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.
2026 சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து அரசியலில் இறங்கியுள்ள விஜய் அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். மாநாடு, பூத் கமிட்டி கூட்டம் என விஜய்யின் நடவடிக்கைகள் அடுத்தடுத்து கட்டத்திற்கு சென்றுள்ளன. இருந்தாலும் நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி எதிர் தரப்பினர் விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர். அதேபோல் ரசிகர்கள் பட்டாளம் வாக்கு சதவீதமாக மாறாது என்ற விமர்சனமும் இருக்கிறது.
இந்தநிலையில் நடிகர் அஜித் இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில் நடிகர்களின் அரசியல் பயணம் பற்றி பல்வேறு கருத்துகளை பகிர்ந்துள்ளார். நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவரவர் விருப்பம் என்றும், அரசியலில் நுழைந்து மாற்றத்தை கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தால் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம், அவர்களை நான் வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார். அதேபோல் தனக்கு அரசியல் பற்றிய எந்த எண்ணமும் இல்லை என்றும் அஜித் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதேபோல் அரசியலுக்கு வருவது 100% தைரியமான முடிவு என வியந்து பாராட்டியுள்ளார் அஜித். இதுதொடர்பாக பேசிய அவர், ‘படத்தை பார்த்துவிட்டு அதுபற்றி நல்லா இருக்கு, இல்லை என்று எளிதாக விமர்சனம் செய்துவிட முடியும். ஆனால் படம் எடுப்பவர்கள் யாரும் நன்றாக இருக்க கூடாது என நினைத்து படம் எடுக்க மாட்டார்கள். எல்லோருமே படம் வெற்றியடைய வேண்டும் என நினைத்துதான் எடுப்பார்கள். அதேபோல் தான் அரசியலும். நாம் வெளியே இருந்து என்ன வேண்டுமானாலும் விமட்சனம் செய்யலாம். அவர்களின் நடவடிக்கைகளில், கொள்கைகள், திட்டங்கள் என எல்லாவற்றிலும் குறை சொல்லலாம். ஆனால் அந்த இடத்தில் இருக்கும் போது அவர்களுக்கு எந்த அளவுக்கு கடமை இருக்கிறது என்பது தெரியும். அரசியல்வாதிகளின் வேலை அவ்வளவு எளிதானது இல்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது” என ஆதரவாக பேசியுள்ளார்.
விஜய் அரசியலுக்குள் வந்ததில் இருந்து விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், விஜய்க்கு ஆதரவாக அஜித் பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.






















