மேலும் அறிய

ABP - C Voter Exit Poll 2024 Results | தென்னிந்தியாவை தட்டி தூக்கிய மோடி! EXIT POLL முடிவில் அதிர்ச்சி!

தென்னிந்தியாவில் காலுன்ற கடந்த தேர்தல் வரை பாஜக தடுமாறி வந்த நிலையில், இந்த தேர்தலில் பாஜக பெருமளவு தென்னிந்தியாவில் வளர்ந்திருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது பலரை ஆச்சரியப் படுத்தி உள்ளது. குறிப்பாக ராகுல் அலை வீசுகிறது, பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்றெல்லாம் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் ஏவிபி சி ஓட்டர்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வேறு விதமாக அமைந்துள்ளது..

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் இன்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில், ஏ பி பி மற்றும் சி ஓட்டர்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் தமிழ்நாடு கேரளா கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய ஐந்து தென் மாநிலங்களில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கப் போகிறது என்னும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பாக முதலில் கர்நாடகாவை பொருத்தவரை, ஒட்டுமொத்தமாக உள்ள 28 தொகுதிகளில் 23 லிருந்து 25 தொகுதிகளை பாஜக கூட்டணி கைப்பற்றும் என்றும் ஐ என் டி ஏ கூட்டணிக்கு வெறும் மூன்றில் இருந்து ஐந்து தொகுதிகள் தான் கிடைக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்கின்றன. வாக்கு சதவீதத்தைப் பொறுத்தளவில் கர்நாடகாவில் பாஜக கூட்டணி 54.2% வாக்குகளை பெரும், அதேநேரம் ஐஎன்டிஐ கூட்டணி 41.8% வாக்குகளை பெரும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்கிறது.

அடுத்ததாக கேரளாவை பொறுத்த அளவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் ஐஎன்டிஏ கூட்டணி 17 முதல் 19 தொகுதிகளை கைப்பற்றும் எனவும் பாஜக கூட்டணி ஒன்று முதல் மூன்று இடங்களை கைப்பற்றும் எனவும் ஏ பி பி சி ஓட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸிட் போல் முடிவுகள் சொல்கிறது. வாக்கு சதவீதத்தை பொறுத்தளவில் ஐஎன்டிஏ கூட்டணி 41.9%, இடது ஜனநாயகம் முன்னணி 33.3%, பாஜக கூட்டணி 22.6 சதவீதம் வாக்குகளை பெறும் என்று முடிவுகள் சொல்கிறது.

மூன்றாவதாக ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் பாஜக கூட்டணி 21 முதல் 25 தொகுதிகளை கைப்பற்றும் எனவும் ஐஎன்டிஏ கூட்டணிக்கு இங்கே ஒரு தொகுதி கிடைக்கக் கூட வாய்ப்பில்லை என்றும் மற்ற சில கட்சிகள் நான்கு தொகுதிகள் வரை கைப்பற்றலாம் எனவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்கிறது. வாக்கு சதவீதத்தைப் பொறுத்தளவில் பாஜக கூட்டணி 52.9%, ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் 41.7%, ஐஎன்டிஏ கூட்டணி 3.3 சதவீதம் வாக்குகளைப் பெறும் என்று இம் முடிவுகள் சொல்கின்றன.

தெலுங்கானாவை பொருத்தவரை மொத்தமுள்ள 17 தொகுதிகளில் ஏழு முதல் ஒன்பது தொகுதிகளில் பாஜகவும், ஏழு முதல் ஒன்பது தொகுதிகளில் ஐஎன்டிஏ கூட்டணியும், அதிகபட்சம் ஒரு தொகுதியை வேறு ஏதேனும் கட்சிகள் கைப்பற்றலாம் என்று ஏ பி பி சி ஓட்டர்ஸ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்கிறது.  வாக்கு சதவீதத்தை பொருத்தவரை ஐஎன்டிஐஏ கூட்டணி 38 .6 சதவீதம், பாஜக கூட்டணி 33 சதவீதம், தெலுங்கு ராஷ்ட்ரிய சமிதி 20 புள்ளி மூன்று சதவீதம், ஏ ஐ எம் ஐ எம் இரண்டு சதவீதம் வாக்குகளை பெறும் என்று முடிவுகள் சொல்கின்றன.

இறுதியாக தமிழ் நாட்டை பொறுத்தளவில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் ஐ என் டி ஏ கூட்டணி 37 முதல் 39 தொகுதிகளில் ஜெயிக்க வாய்ப்பு இருப்பதாகவும், பாஜக கூட்டணி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும், அதே நேரம் அதிமுகவோ ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்று ஏ பி பி சி ஓட்டர்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்கின்றன. தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு இணையான வாக்குகளை பாஜக பெரும் என்று எக்ஸிட் போல் முடிவுகள் செல்கிறது, ஐஎன்டிஏ கூட்டணி 46 புள்ளி 3 சதவீதம், அதிமுக கூட்டணி 21 சதவீதம், பாஜக கூட்டணி 18.9 சதவீதம் வாக்குகளை பெறும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்கிறது.

கடந்த 2019 தேர்தலுடன் ஒப்பிட்டு பார்த்தால், கர்நாடகாவில் கடந்த முறை பாஜக 25 மக்களவைத் தொகுதிகளை கைப்பற்றி இருந்தது, இந்நிலையில் இம்முறையும் அதே அளவிலான தொகுதிகளை கர்நாடகாவில் பாஜக கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்கின்றன. 

கர்நாடகாவில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்று தெரியவரும் நிலையில், கேரளாவில் இம்முறை பாஜக காலூன்றும் என்று தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்கிறது. கடந்த 2019 தேர்தலில் கேரளாவில் ஒரு தொகுதியை கூட வெல்லாத பாஜக கூட்டணி, இம்முறை ஒன்றிலிருந்து மூன்று தொகுதிகளை வெள்ள வாய்ப்பு இருப்பதாக ஏ பி பி சி ஓட்டர்ஸ் கருத்துக்கணிப்பு தெரியவந்துள்ளது. வாக்கு சதவீதத்திலும் கடந்த முறை 13 சதவீத வாக்குகளை கேரளாவில் பெற்ற பாஜக இம்முறை 22.6 சதவீதம் வாக்குகளை பெறும் அதாவது கிட்டதட்ட பத்து சதவீதம் அளவில் பாஜகவின் கேரள வாக்கு வாங்கி உயரும் என்று முடிவுகள் சொல்கிறது.

அதேபோன்று ஆந்திராவில் கடந்த முறை ஒரு தொகுதியை கூட வெல்லாத பாஜக, இம்முறை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடனும் ஜனசேனா கட்சியுடனும் கூட்டணி சேர்ந்து தேர்தல் களத்தை எதிர்கொள்கிறது. அதன் காரணமாக 21 லிருந்து 25 தொகுதிகளை ஆந்திராவில் பாஜக கூட்டணி கைப்பற்றும் என்று தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்கின்றன. 

அதேநேரம் தெலுங்கானாவில் கடந்த தேர்தலில் எட்டு தொகுதிகளை வென்றிருந்த பாஜக கூட்டணி இம்முறை 7 முதல் 9 தொகுதிகளை கைப்பற்ற வாய் இருப்பதாக ஏவிபி சி ஓட்டர்ஸ் நிறுவனத்தின் கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிய வந்துள்ளது. 

தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் கடந்த 2019 தேர்தலில் 38 இடங்களை திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றிய நிலையில், ஒரு தொகுதியை அதிமுக கைப்பற்றியது. ஆனால் இம்முறை அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து விலகி இருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து பாஜக தமிழ்நாடு தேர்தல் களத்தை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இம்முறை இரண்டு தொகுதிகள் வரை பாஜக கூட்டணி கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவில் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி பெருமளவில் அதிகரித்துள்ளதாக இந்த முடிவுகள் சொல்கின்றன, கிட்டத்தட்ட அதிமுகவின் வாக்கு சதவீதத்துக்கு இணையாக இம்முறை பாஜக வாக்குகளை பெரும் என்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் ஒட்டுமொத்தமாக தென்னிந்தியாவில் உள்ள 127 தொகுதிகளில், 52 - 64 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக ஏ பி பி சி ஓட்டர்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கிறது. அப்படி பார்க்கையில் கடந்த தேர்தலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தென்னிந்தியாவில் பாஜக வளர்ந்துள்ளது இந்த முடிவுகள் காட்டுகின்றன.

எனினும் இது அனைத்துமே கருத்துக்கணிப்புகளே என்னும் நிலையில் ஜூன் நான்காம் தேதி, மக்களவைத் தேர்தலின் உண்மையான முடிவுகள் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் வீடியோக்கள்

விடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா
Eknath shinde | விடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
Embed widget