மேலும் அறிய

Aarthi IAS Profile : வாங்க ஆர்த்தி IAS...அழைத்த உதயநிதி! DEPUTY CM-ன் துணை செயலாளர்!

வாங்க ஆர்த்தி IAS...

அழைத்த உதயநிதி!

DEPUTY CM-ன் துணை செயலாளர்!


CONTRACT-ஐ கேன்சல் பண்ணிடுவேன். என்ன பண்ணி வச்சீருக்கிங்க? எழைக்களுக்காக தானே வீடு கட்டுறோம், விஜிலன்ஸ் ரெய்டு வரும் என்று அரசு அதிகாரிகளையும், ஒப்பந்ததாரர்களையும் ரெய்டு விட்ட காஞ்சிபுரத்தின் முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி IAS-ஐ யாரும் மறந்திருக்க முடியாது.

அப்படி அதிரடிக்கு பெயர் போன ஆர்த்தி IAS தான் தற்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சமக்ர சிக்‌ஷாவின் மாநில திட்ட இயக்குநர், காஞ்சிபுரத்தின் முன்னாள் கலெக்டர் என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள ஆர்த்தி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் மோடியின் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றவர். இவரை உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய துணை செயலாளராக நியமித்துள்ளது எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது..

குடும்பம், சமுதாயம் என அனைத்தையும் எதிர்த்து அந்த காலத்திலேயே சமூக புரட்சியான கலப்பு திருமணம் செய்து கொண்ட பெற்றோருக்கு மகளாக பிறந்தவர் தான் ஆர்த்தி. ஆர்த்தியின் சிறு வயதில் அவரின் தந்தை சில காலம் காஞ்சிபுரத்தில் பணியாற்றியுள்ளார், அதனால் காஞ்சிபுரத்தின் மீது எப்போதும் தனி பிரியம் கொண்டிருந்தார் ஆர்த்தி. 

பல் மருத்துவரான டாக்டர் ஆர்த்தி தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்த நிலையில், முதல் டிரான்ஸ்பர் ஆர்டரிலேயே காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆட்சியராக நியமிக்கப்பட்டார் ஆர்த்தி. தான் சிறுமியாக பார்த்து வளர்ந்த அதே மாவட்டத்திற்கு கெத்தாக கலெக்டராக வந்து நுழைந்த ஆர்த்தி, காஞ்சிபுரத்தை தன்னுடைய சொந்த மாவட்டமாகவே கருதினார். 

காஞ்சிபுரத்தின் ஆட்சியராக பதவியேற்ற ஆர்த்தி IAS-க்கு காத்திருந்தது முதல் சவால், சரியாக கொரோனா வைரசின் இரண்டாவது அலை பாதிப்பு படிபடியாக குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் காலகட்டம். மாவட்டம் முழுவதும் குறிப்பாக தொழிற்சாலைகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு 100% தடுப்பூசியை போட வேண்டிய அத்தியாவசிய பொறுப்பை ஆர்த்தி கையில் எடுத்தார். 

குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இயங்கும் தொழிற்சாலைகளில் வடமாநிலம் மற்றும் வெளியூரை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் பணி புரிந்தனர், அவர்களை கண்டறிந்து தடுப்பூசி பணிகளை முடக்கிவிட்டார் ஆர்த்தி. அதே போன்று மாவட்டம் முழுவதும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்த ஆர்த்தி தமிழ்நாட்டிலேயே தடுப்பூசி போடும் பணியில் சிறந்த மாவட்டங்களில் ஒன்றாக காஞ்சிபுரத்தை மாற்றினார். 

முக்கியமாக மக்கள் எளிதில் அணுகக் கூடிய மாவட்ட ஆட்சியர்கள் ஒருவராக வலம் வந்த ஆர்த்தி IAS, பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் எடுப்பது அடிக்கடி திடீர் ஆய்வுகளை மேற்கொள்வது என எப்போதுமே பரபரப்பாக இயங்ககுடியவர். 

ஆளும் கட்சி, எதிர் கட்சி என்ற பாரபட்சமின்றி அரசு திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் ஆர்வம் காட்டினார் ஆர்த்தி. அதன் பயனாக ஜல்ஜீவன் திட்டத்தில் 2.15 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆர்த்தியை பாராட்டினார். மேலும் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தை 100 சதவீதம் நிறைவெற்றிய மாவட்டமாக காஞ்சிபுரம் திகழ்ந்ததால் பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கிய கலெக்டர் என்று ஆர்த்தி IAS-ஐ பாராட்டி பிரதமர் நரேந்திர மோடி விருது வழங்கி கவுரவித்தார். 


இதுபோக தன்னுடைய பார்வைக்கு வரும் மனுக்கள் மீது உடனே நடவடிக்கைகளை துரிதப்படுத்திய ஆர்த்தி, பழங்குடியின மக்களுக்கு இருளர் இன மக்களுக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்குவதிலும், வீடுகள் கட்டிக் கொடுப்பதிலும் தனி கவனம் செலுத்தினார்‌. அதனால் காஞ்சிபுரத்தில் குறுகிய காலத்தில் பல பழங்குடியின மக்களுக்கு பட்டா மற்றும் வீடுகள் வழங்கப்பட்டது. அதேபோன்று பெருமழை காலகட்டத்திலும் அவரது பணி சிறப்பாக அமைந்தது. 

குறிப்பாக தவறு செய்யும் அதிகாரிகள் எப்போதும் ஆட்சியர் ஆர்த்தி பெயரை கேட்டால் அலறுவார்கள், அதற்கு ஒரு எடுத்துக்காட்டு தான் ஒருமுறை வாலாஜாபாத் பகுதியில் பழங்குடியின மக்களுக்கு கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை ஆய்வு மேற்கொண்டபோது அது தரம் இல்லாமல் இருந்தது.. இதை கண்ட ஆர்த்தி, FIELD visit-ல் நேரடியாக தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார். பணிகளை சரியாக செய்யாத ஒப்பந்ததார்கள், காணிக்க தவறிய அதிகாரிகள் மீது கடும் கோபம் கொண்ட ஆர்த்தி, அதிகாரிகளை அனைவர் முன்னிலையிலும் எதைப்பற்றியும் யோசிக்காமல் கேள்வி மேல கேள்வி எழுப்பி திக்கு முக்காட செய்தார்.

மேலும் தரமற்ற முறையில் கட்டியதற்காக கட்டுமான பணிகளை கவனிக்காத வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இருவரை  பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டார்‌. இதனால் ஆட்சியர் ஆர்த்தி ஆய்வுக்கு வருகிறார் என்றாலே அதிகாரிகளுக்கு பயம் தொற்றிக்கொள்ளும். இப்படி பட்ட ஒருவரை தான் தற்போது  தன்னுடைய துணை செயலாளராக நியமித்துள்ளார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். இதனால் இனி எந்த மாதிரியான நிர்வாக ரீதியிலான அதிரடிகள் தொடங்க போகிறதோ என்று அதிகாரிகள் முனுமுனுக்க தொடங்கியுள்ளனர்.

அரசியல் வீடியோக்கள்

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக
Rahul Gandhi protest | 21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
Embed widget