(Source: ECI/ABP News/ABP Majha)
Siddaramaiah : ''ஆட்சியை கவிழ்க்க சதி..''கதறும் கர்நாடக காங்கிரஸ்! பதற்றத்தில் சித்தராமையா
கர்நாடக முதல்வர் சித்தராமய்யாவின் மனைவிக்கு சட்ட விரோதமாக 14 வீட்டு மனை கர்நாடகாவின் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம்களை ஒதுக்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் கர்நாடக ஆளுநர் தவச்சந்த் கேளாட் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது..
இந்நிலையில் ஆட்சியை கலைக்க சதி நடைபெறுவதாக கர்நாடக காங்கிரஸ் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளதால், கர்நாடகாவில் அரசியல் சூழல் பரபரப்பாகியுள்ளது..
கர்நாடகாவின் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் சட்டவிரோதமாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கி இருப்பதாக பாஜக பகீரை கிளப்பியுள்ளது.
ஆனால் இதை மறுக்கும் கர்நாடக முதல்வர் சித்தராமையா, தன்னுடைய மனைவி நிலத்தை சட்டவிரோதமாக மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் ஆக்கிரமித்ததாகவும், அதற்கு இழப்பீடாகவே தற்போது 14 மனைகளை ஒதுக்கீடு செய்துள்ளது MUDA என்கிறார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தை முழு வீச்சில் கையில் எடுத்துள்ள பாஜக கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக ஆளுநர் தாபர்சன்ட் கேலாட்டிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் கர்நாடக ஆளுநர் கேலாட், முதல்வர் சித்தராமியாவை இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனால் கர்நாடக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
மேலும் இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா விடம் தேசிய காங்கிரஸ் தலைமையும் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் மக்களவையில் எல்லா வகையிலும் ராகுல் காந்தி பாஜகவுக்கு குடைச்சல் கொடுத்து வரும் நிலையில், காங்கிரஸ் எந்த இடத்திலும் சறுக்கி விடக்கூடாது. விவகாரத்தை சரியாக கையாள வேண்டும் என்று தேசிய தலைமை அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.
அதேநேரம் கர்நாடக முதல் சிந்தராமையா பதவி விலக வேண்டும் என்று கூறி பெங்களூர் மைசூர் இடையே பாதயாத்திரை நடத்தப் போவதாக பாஜக அறிவித்திருக்கிறது.
ஆனால் தங்களிடம் முறையாக கலந்தாலோசிக்காமல் இந்த பாதயாத்திரையை பாஜக அறிவித்துள்ளதாக குறிப்பிட்டு, குமாரசாமியின் ஜெ டி எஸ் இந்த யாத்திரியை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
அதே நேரம் கர்நாடக காங்கிரஸோ, ஆளுநர் அரசியல் சாசனத்தின் வரையறைக்கு உட்பட்டு தான் நடக்க வேண்டும். ஆளுநர் முதல்வரிடம் விளக்கம் கேட்பது வரலாற்றில் எங்கும் நடைபெறாதது, கர்நாடகாவில் சுமூகமாக நடந்து வரும் அரசை கலைப்பதற்கு சதி நடைபெற்று வருவதாக கொந்தளித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கர்நாடக சட்டப்பேரவைக்கு முன்பாக அனைத்து அமைச்சர்களையும் தன்னுடைய வீட்டில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார் முதலமைச்சர் சிதராமையா. இந்த விவகாரத்தை எப்படி எதிர்கொள்வது, அரசை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து அதில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்தியாளர்களிடம் பேசியுள்ள கர்நாடக முதல்வர் சித்தராம் ஐயா, ஆளுநருக்கு உரிய முறையில் அனைத்து ஆவணங்களுடன் விளக்கம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.