கேள்வி கேட்டால் தப்பா? அமைச்சர் நிகழ்ச்சியில் அடிதடி! அதிமுக MLA-க்கள் கைது! ADMK MLA Arrest
தருமபுரியில் சுற்றுலாத்துறை அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தருமபுரி மாவட்டம், அரூர் அருகேயுள்ள கோபாலபுரத்தில் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இதனை ஆய்வு செய்ய சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் வருகை தந்தார். அப்போது ஆலையின் நுழைவாயில் பகுதியில் நின்றிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் சம்பத்குமார் மற்றும் கோவிந்தசாமி ஆகியோர் அமைச்சரை தடுத்து நிறுத்தி , ஆலை செயல்பாடுகள் குறித்து சட்டசபையில் தவறான தகவல் கூறியதாக அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
ஆலையில் அமைக்கப்பட்ட இணை மின் நிலையம் பற்றிய கேள்விக்கு 40% பணிகள் நிறைவேற்றியதாக கூறினீர்கள். அப்படி பணி நடந்திருந்தால் நான் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன் இல்லையென்றால் உங்கள் பதவியை ராஜினாமா செய்ய நீங்கள் தயாரா? என கோவிந்தசாமி எம்எல்ஏ அமைச்சரிடம் சவால் விட்டதாகவும் அதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர்களை வெளியேற கூச்சலிட்டு அதிமுக எம்.எல்.ஏக்களை நோக்கி தாக்கும் முயற்சி ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அதிமுக எம்.எல்.ஏ-க்களை கைது செய்து அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.





















