வாலாஜாபாத் புறவழிச்சாலை திறப்பு: போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி! வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!
Walajabad Bypass Road Open: "வாலாஜாபாத் பகுதியில் 141 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 6.5 கிலோமீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்ட, புறவழிச்சாலை இன்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது."

"காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் இன்று புறவழிச்சாலை திறக்கப்பட உள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக ஒரகடம், படப்பை உள்ளிட்ட தொழிற்சாலை செல்லும் மக்களுக்கு இந்த புறவழிச் சாலை வரப் பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது."
வாலாஜாபாத் பகுதியில் போக்குவரத்து நெரிசல்
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு சாலை மிக முக்கிய சாலையாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலை வழியாக, வாலாஜாபாத் சென்று, அங்கிருந்து ஒரகடம், படப்பை மற்றும் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோன்று காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டில் செங்கல்பட்டில் இருந்து, காஞ்சிபுரத்திற்கும் வாலாஜாபாத் வழியாக வருபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் வாலாஜாபாத் மையப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலால் வாலாஜாபாத் சிக்கி தவித்து வந்தது. இதனால் மக்களுக்கு நேர விரையும் மற்றும் பொருளாதார ரீதியில் பாதிப்பும் ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு வாலாஜாபாத் பகுதியில் புறவழிச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.
வாலாஜாபாத் புறவழிச்சாலை (Walajabad Bypass Road)
வாலாஜாபாத் பேருந்து நிலையம் மற்றும் கடைவீதி பகுதிகளில் லாரிகள், பேருந்துகள் மற்றும் தொழிற்சாலை வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதற்குத் தீர்வாக, சுமார் 6.5 கிலோமீட்டர் தொலைவிற்குப் புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக சுமார் 141 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. இச்சாலை காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில், வெண்குடி அருகே தொடங்கி கிதிரிப்பேட்டை வழியாகச் சென்று புளியம்பாக்கம் சாலையை இணைக்கிறது.
சிறப்பம்சங்கள் என்ன ?
தற்போதைய சூழலில் வாலாஜாபாத் நகருக்குள் கனரக வாகனங்கள், கடந்து செல்ல 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை ஆவதால், பணிக்குச் செல்வோர் மற்றும் வணிகர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். நெரிசலில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் எரிபொருள் வீணாவதாக லாரி உரிமையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்தநிலையில் புறவழிச் சாலை திறக்கப்பட்டால், போக்குவரத்து நெரிசலில் இருந்து தீர்வு காணப்படும்.
காஞ்சிபுரத்திலிருந்து ஒரகடம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்களுக்கும் இந்த சாலை வரப் பிரசாதமாக அமையும். அதேபோன்று செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தை வாலாஜாபாத் நகருக்குள் செல்லாமல் இணைக்கும் வகையிலும் இந்த பாலும் செயல்படும் என்பதால், காஞ்சிபுரம், வாலாஜாபாத் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த புறவழிச்சாலை அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று திறப்பு விழா -Walajabad Bypass Road Opening Date.
பணிகள் முடிந்த பிறகும் இந்த சாலை திறக்கப்படாமல் இருந்ததால், பல்வேறு விமர்சனங்கள் இருந்தது. இந்தநிலையில் இன்று வாலாஜாபாத் புறவழிச்சாலை மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.























