ஜோதிகாவின் இன்ஸ்டா Entry..க்யூட்டாக கமெண்ட் அடித்த சூர்யா
இன்ஸ்டா உலகிற்கு அறிமுகமாகி இருக்கிறார் நடிகை ஜோதிகா(Jyothika). அவரின் எண்ட்ரிக்கு சூர்யா வரவேற்பு தெரிவித்து பதிவிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரிதான் இன்றைய வைரல். தமிழ் திரையுலகின் மிகவும் கொண்டாடப்படும் ஜோடிகளில் சூர்யா - ஜோதிகா என்றைக்குமே ஹைலைட்தான்.
இந்நிலையில், சமூக வலைதளத்திற்கு அறிமுகமாகி இருக்கும் ஜோதிகாவை சூர்யா வரவேற்று டேக் செய்துள்ளது ரசிகர்கள் மத்தியல் வைரலாகி உள்ளது. கோலிவுட் வட்டாரத்தில் 15 ஆண்டுகால திருமண பந்தத்திற்கு பிறகும் ஒரு காதல் ஜோடி பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது என்றால் அது சூர்யா- ஜோதிகா இணையர்தான். ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் காதல், மரியாதை, நட்புணர்வு, புரிதல் இவைகளாலேயே இவர்கள் அதிக கவனம் பெருகின்றனர். கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி இவர்களின் திருமணம் நடைபெற்றது. அப்போது வெளியான இவர்களின் புகைப்படங்கள் பலராலும் கொண்டாடப்பட்டது. அன்று முதல், சூர்யா ஜோதிகா எடுக்கும் முடிவுகளுக்கு எப்போது பக்க பலமாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், இப்போது இந்த காதல் ஜோடிகளின் புகைப்படங்களை இனி இன்ஸ்டாகிராமில் காணலாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சூர்யா- ஜோதிகா இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கும் விதம், நட்பு, மற்றவர்களுக்கு மிகச்சிறந்த முன் உதாரணம் எனவும் ரசிகர்கள் இந்த கோலிவுட் ஜோடியை கொண்டாடி வருகின்றனர்.