திடீரென மயங்கி விழுந்த விஷால் பதறி உதவிய திருநங்கைகள் பரபரப்பான கூவாகம் திருவிழா Vishal Health Condition
விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் திருநங்கை அழகி போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் விஷால் மேடையிலேயே மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது 20 நிமிடங்களுக்கு பிறகு விஷால் விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகள் ஒன்று கூடி ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விழா எடுத்து கொண்டாடி வரக்கூடிய சூழ்நிலையில் இந்த ஆண்டுக்கான கோயில் திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருநங்கைகள் தாலி கட்டிக் கொள்ளும் நிகழ்வு நாளை நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்துள்ளானர்.
இந்நிலையில் திருநங்கைகளை உற்சாகப்படுத்தும் வகையில் மிஸ்க் திருநங்கை அழகி போட்டி மற்றும் நடன போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் விழுப்புரத்தில் நேற்று மாலை நடைபெற்றது. தேசிய திருநங்கை கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற மிஸ் திருநங்கை அழகு போட்டியில் திரைப்பட நடிகர் விஷால் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். பேசி முடித்தவுடன் புறப்படும் சமயத்தில் திடீரென மேடையிலேயே நடிகர் விஷால் மயங்கி கீழே சரிந்து விழுந்தார் இதனால் விழாவில் பெரும் பரபரப்பு, பதற்றமும் நிலவியது. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் மயங்க நிலையில் இருந்த விஷாலுக்கு உடனடியாக மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு மேடையிலேயே முதலுதவி சிகிச்சை களை அளிக்கப்பட்டது.
இதன்பிறகு சுமார் 20 நிமிடத்திற்கு பிறகு மயக்கம் தெளிந்து எழுந்த விஷால் காரில் ஏறி விழுப்புரத்தில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவத்தால் விழுப்புரத்தில் பரபரப்பு நிலவுகிறது.





















