சறுக்கிய விஜய் கிராஃப்? தள்ளாடும் தளபதி கச்சேரி! VIEWS குறைந்தது ஏன்?
முதல் பாடல்கள் என்று வரும் போது வியூஸிலும் லைக்ஸிலும் மிரள வைக்கும் விஜய்யின் கிராஃப் ஜனநாயகன் பட பாடலில் கீழ்நோக்கி இறங்கியிருக்கிறது. அரசியல் ENTRY தான் காரணமா என சோசியல் மீடியாவில் விவாதம் நடந்து வருகிறது.
விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம் மேனன், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இதுதான் விஜய்யின் கடைசி திரைப்படம் என சொல்லப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. ஜனநாயகத்தில் விஜய் என்ன அரசியல் பேசப் போகிறார் என்று அரசியல் வட்டாரத்திலும் ஆர்வம் இருக்கிறது.
ஜனநாயகன் படத்தின் முதல் சிங்கிள் தளபதி கச்சேரி நேற்று வெளியானது. பாடல் வரிகள் விஜய்யின் அரசியல் எண்ட்ரியை குறிப்பிடும் வகையில் எழுதப்பட்டுள்ளன. விஜய் பிரச்சார வாகனத்தில் இருப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதே ஜனநாயகன் படப்பிடிப்பும் சேர்த்து நடத்தப்பட்டதா என எதிர் தரப்பினர் விமர்சிக்கின்றனர்.
விஜய் படங்களின் முதல் பாடல்களுக்கு இருக்கும் ஹைப் தளபதி கச்சேரி பாடலில் தலைகீழாக மாறியுள்ளது. விஜய்யின் பாடல்கள் வெளியானதுமே வியூஸும் லைக்ஸும் எகிறுவது வழக்கம். பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே மில்லியன் வியீஸ்களை அசால்ட்டாக கடந்துவிடும். விஜய்யின் முந்தைய பட பாடல்களை விட இந்த பாடலுக்கு எந்த அளவு அதிக வியூஸ் இருக்கிறது என்று சோசியல் மீடியாவே பரபரப்பாக இருக்கும்.
தளபதி கச்சேரி பாடல் 24 மணி நேரத்தில் 12.5 மில்லியன் வியூஸை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. 2022ல் இருந்து வெளியான விஜய் படங்களிலேயே தளபதி கச்சேரி தான் குறைந்த வியூஸை பெற்று சறுக்கியுள்ளது. பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் 24 மணி நேரத்தில் 23.7 மில்லியன் வியூஸை கடந்திருந்தது. அதே போல் வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் 18.5 மில்லியன் வியூஸை கடந்திருந்தது. லியோ படத்தின் நான் ரெடிதான் வரவா பாடல் 20 மில்லியன் வியூஸையும், GOAT படத்தின் விசில் போடு பாடல் 25.5 மில்லியன் வியூஸையும் கடந்திருந்தது.
23 மில்லியன் வியூஸுடன் முன்னணியில் இருந்த அரபிக் குத்து பாடலை விசில் போடு பாடல் 25 மில்லியன் வியூஸுடன் ஓவர்டேக் செய்தது. இப்படி அவரது படத்தின் பாடல்களையே விஜய் முறியடிக்கும் வகையில் முதல் பாடல்களுக்கு கிராஃப் எகிறியது. ஆனால் தளபதி கச்சேரி பாடலில் வியூஸ் முந்தைய பாடல்களை விட குறைந்துள்ளது.
விஜய்யின் அரசியல் வருகைக்கு பிறகு ரசிகர்களின் மனநிலை மாறிள்ளதா என சமூக வலைதளங்களில் விவாதம் நடந்து வருகிறது. சோசியல் மீடியாவிலும் அரசியல் ரீதியாகவே பாடல் ட்ரெண்ட் ஆகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இல்லையா என்று விமர்சிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், ஜனவரி 9ம் தேதி திரைக்கு வருகிறது ஜனநாயகன். இந்தப் பட வேலைகளுக்கு பிறகு முழு நேர அரசியலில் களமிறங்குகிறார் விஜய். ஜனநாயகன் படம் தேர்தல் நேரத்தில் அவருக்கு கை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.





















