Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?
தமிழக காவல்துறையின் DGP ஷங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால், நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கோலிவுட்டில் களமிறங்கவுள்ளது அனைவரின் பார்வையையும் ஈர்த்துள்ளது.. இந்நிலையில் யார் இந்த தவ்தி ஜிவால் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது..
எரிமலையின் மகளே என்னும் ஆல்பம் பாடல் மூலமாக ஹிட்டானவர் தவ்தி ஜிவால். கடந்த ஆண்டு இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஆல்பம் பாடலில் அறிமுகமான தவ்தி ஜிவாலுக்கு, கோலிவுட்டின் கதவுகள் திறக்கப்பட்டது. இதையடுத்து டாடா படத்தின் டைரக்டரான கனேஷ் கே பாபு இயக்கும் படத்தில் தவ்தி ஜிவால் தற்போது அறிமுகமாகவுள்ளார். இந்த திரைப்படத்தில்முதலில் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது, அதன் பின் நடிகர் ஜீவாவுடன் தவ்தி ஜிவால் ஜோடி சேற உள்ளார் என்று தகவல் வெளியான நிலையில், தற்போது இந்த படத்தில் ஜெயம் ரவி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
நடிகர் ஜெயம் ரவியின் 34 படத்தில் தவ்தி ஜிவால் கதாநாயகியாக நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது. இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலானது.
சினிமாவில் நுழைய வேண்டும் என்ற கனவோடு முயற்சித்து வந்த டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவாலின் கனவு நிறைவேறியுள்ளது..
தவ்தி ஜிவால் புத்தகம் படிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் என கூறப்படுகிறது. ஆனால் இவரது பிறந்து வளர்ந்தது, கல்வி பயின்றது உள்ளிட்ட பல விவரங்கள் தற்போது வரை பெரிதாக வெளியே தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கோலிவுட்டின் புதிய ஹீரோயின் தவ்திக்கு தற்போதே ரசிகர் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது