Mamitha Baiju VR Mall Issue : சென்னை வந்த பிரேமலு நடிகை.அத்துமீறிய ரசிகர்கள்1கொந்தளிக்கும் சேட்டன்கள்!
பிரேமலு ஃபேம் நடிகை மமிதா பைஜு மீது ரசிகர்கள் அத்துமீறி கை வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசின், நயன்தாரா வில் தொடங்கி நஸ்ரியா வரை மலையாள நடிகைகளுக்கு தமிழ் ரசிகர் மத்தியில் எப்போதுமே தனி க்ரேஸ் உண்டு… அந்த வகையில் பிரேமலு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை மமிதா பைஜு..பிரேமலு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது..
ஒவ்வொரு திரைப்படம் வரும் போதும் அந்த படத்தில் வரும் ஹீரோயினை காட்டி இந்த மாதிரி பெண் தான் வேனும் என ரசிகர்கள் மீம்ஸ்களில் கதறுவது வழக்கம்.. அப்படி தான் பிரேமலு படத்திற்கு பின் ரீனு மாரி பொன்னு தான் வேணும் என அடம்பிடித்துவந்தனர் ஃபேன்ஸ். தனது க்யூட்டான எக்ப்ரஸனால் ஃபேன்ஸை வெகுவாக கவர்ந்துள்ளார் மமிதா.
இந்நிலையில் சென்னை வி ஆர் மாலில் உள்ள கடை திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மமிதா பைஜு கலந்து கொண்டார். பொதுவாக கடைகளின் திறப்பு விழாவிற்கு நடிகைகள் கலந்து கொள்வது வழக்கம் தான்.. ஆனால் அதற்கேற்ற பாதுகாப்பும் பக்காவாக இருக்கும்.. நடிகர்களை பார்த்தாலே உற்சாகத்தில் ரசிகர்கள் கட்டுக்கடங்காமல் ஓடுவார்கள்.. இந்நிலையில் நடிகை என்றால் சும்மாவா.. பாய்ந்து விடுவார்கள்..
இந்நிலையில் இந்த நிகழ்வின் போது கடை நிர்வாகத்தில் ஹீரோயினை எல்லாம் பக்காவா அழைத்து வந்துவிட்டு பாதுகாப்பில் கோட்டை விட்டுவிட்டனர்..
மமிதா வருகையை பார்த்து ரசிகர்கள் கூடிவிட்டனர்.. கூட்டத்தை கட்டுப்படுத்த இயலாமல் கடை நிர்வாகம் தவித்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கிய நடிகை மமிதா தினறிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால் அப்போது அதிர்ச்சிகரமாக சம்பவம் ஒன்று நிகழந்துள்ளது.. கூட்ட நெரிசலை தவறாக பயன்படுத்திக்கொண்ட சில நபர்கள் மமிதா மீது அத்துமீறி கை வைத்துள்ளனர். இது மமிதாவுக்கு கசப்பான அனுபவத்தை கொடுத்துள்ளது.
இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் வசைபாட வைத்துள்ளது.. மேலும் மலையாள ரசிகர்கள் பலரும் சென்னை இளைஞர்களை திட்டித்தீர்த்து வருகின்றனர்.