மேலும் அறிய

Kenisha Reveals Jayam Ravi Relationship : ”DIVORCE நோட்டீஸ் அனுப்பிட்டு! ஜெயம் ரவி என்னிடம் வந்தார்”

ஜெயம் ரவிக்கு அவருடைய மனைவி ஆர்த்தியும், ஆர்த்தியின் அம்மாவும் செய்த செயல்கள் கொடுமையானது. மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த ஜெயம் ரவி என்னிடம், ஹீலிங் செய்துகொள்வதற்காக வந்தார். டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிய பிறகு தான் ஜெயம் ரவி எனக்கு அறிமுகமே ஆனார், அப்படி இருக்கையில் நான் எப்படி அவர்களின் பிரிவுக்கு காரணமாக இருக்க முடியும்? ஒருவேலை பியுசரில் எனக்கும் ஜெயம் ரவி இடையேவும் எதேனும் நடந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை என்று முதல் முறையாக ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியின் பிரிவு குறித்து மவுனம் களைத்துள்ளார் பாடகி கெனிஷா.

தொடர்ந்து சமூக வளைத்தளங்களில் பலர் கெனிஷா தான், ஜெயம் ரவி ஆர்த்தி இடையே விவாகரத்து ஏற்பட காரணம் என்று விமர்சித்து வந்த நிலையில், அது அனைத்திற்கும் புல் ஸ்டாப் வைக்கும் வகையில் டிடி நெக்ஸ்ட் நாளிதழுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார் கெனிஷா. அதில் “சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளால் கவலை அடையும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என்னை தொடர்ந்து அழைக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் என்னை அறிந்தவர்களுக்கு என்னுடைய குணாதிசயம் மற்றும் வேலை குறித்து தெரியும். நான் எப்போதுமே யாருக்கு மனநிலை தேவை ஏற்பட்டாலும் அவர்களிடம் இரக்கம் உள்ள நபராக இருந்துள்ளேன்.

ஆன்லைனில் என் குறித்து அப்பட்டமான பொய்களையும் குற்றச்சாட்டுகளையும் பார்க்கிறேன் எவ்வளவு நாள் தான் என்னால் பொறுமையாக இருக்க முடியும்? என்னுடைய கண்ணியத்தை வேற எந்த நபரும் கேள்வி கேட்பதை என்னால் அனுமதிக்க முடியாது. 

முதன் முதலில் இதை யார் சொல்வாரோ எனும் என்னுடைய பாடல் வெளியீட்டு விழாவில் ஜெயம் ரவியை பார்த்தேன். அந்த நிகழ்ச்சியில் நன்றாக பேசிக் கொண்டோம், திரைத்துறையை சேர்ந்த பல கலைஞர்கள் அதில் பங்கேற்று இருந்தனர். அதன் பிறகு நாங்கள் பெரிதாக பேசிக் கொண்டதில்லை, ஒன்று இரண்டு தருணங்களில் பேசியபோதும் அது பணி சார்ந்தே இருந்தது. ஒருமுறை அவருடைய குடும்பம் குறித்து ஒரு வீடியோவில் மிகவும் பாசமாக பேசியிருந்தார், அதற்கு நான் வாழ்த்து தெரிவித்திருந்தேன். 

ஏற்கனவே ஜெயம் ரவியிடம் நான் ஆன்மீக ரீதியாகவும் மற்றும் மனநல சார்ந்த பிரச்சினைகளுக்கு சிகிச்சை வழங்குவது குறித்து தெரிவித்திருந்தேன். அதுவே எங்களுடைய தொழில் சார்ந்த ரிலேஷன்ஷிப்பை உருவாக்கியது. 

நான் எட்டு வித்தியாசமான குணப்படுத்தும் முறைகளை பயின்றுள்ளேன். ஹிலிங் பயிற்சி குறித்து எந்த விஷயங்களும் தெரியாத நபர்கள் சிலர் அதற்கு எதிராக பேசுவதை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது. நான் ஹீலிங் செய்வதை முக்கிய பணியாக எடுத்துக் கொண்டுள்ளேன், 182 நபர்கள் அவர்களுடைய மனம் மற்றும் உடல் சார்ந்த பிரச்சனைகளுக்காக என்னிடம் தீர்வு பெறுகிறார்கள். 

அதில் நடிகர் ஜெயம் ரவியும் ஒருவர். கடந்த ஜூன் மாதம் ஜெயம் ரவி என்னை தொடர்பு கொண்டார், அப்போது மனரீதியாகவும் எமோஷனல் ஆகவும் தன்னுடைய திருமண வாழ்க்கையில் மனைவி ஆர்த்தி மூலமாக அவர் காயப்பட்டிருந்தார். பல செய்திகளில் ஜெயம் ரவி ஆர்த்தி தம்பதியினர் பிரிவதற்கு நான்தான் காரணம் என்று எழுதியுள்ளார்கள். அது அனைத்துமே பொய்யான தகவல். ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன், இருவரும் பிரிவதாக முடிவெடுத்து, ஆர்த்திக்கு டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பிய பிறகுதான் ஜெயம் ரவி என்னை தொடர்பே கொண்டார். 

மனசு சரியாக இல்லாததால் இது குறித்து சென்னையில் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று அவர் நினைப்பதால் என்னை தொடர்பு கொண்டார். நான் உடனடியாக அவருக்கு ஹீலிங் சிகிச்சை அளிக்க தொடங்கவில்லை, முதலில் அவருடன் பேசி என்னால் உண்மையில் அவருக்கு உதவ முடியுமா என்பதை உறுதி செய்த பின்பே அவரை ஏற்றுக் கொண்டேன்.

ஜெயம் ரவி காருக்கு போடப்பட்ட அபராதத்தில் என்னுடைய பெயர் எப்படி வந்தது என்று பல கேள்வி எழுப்புகின்றனர். ஒருமுறை ஜெயம் ரவி சென்னையில் இருந்து கோவா வரை தானே தன்னுடைய காரை ஓட்டிக்கொண்டு வந்ததால், மிகவும் சோர்வடைந்திருந்தார். என்னுடைய ஹீலிங் சென்டரை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை, அதனால் நானும் என்னுடைய நண்பரும் அவரை அழைத்து வருவதற்காக சென்றோம். அப்போது அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டதால், என்னுடைய சென்டர் வரை நான் ஜெயம் ரவியின் காரை ஓட்டி வந்தேன். அதன் காரணமாகவே போக்குவரத்து விதிமீர்களுக்காக செல்லான் விதிக்கப்பட்ட போது நான் என்னுடைய டிரைவிங் லைசென்ஸ் எடுத்துக் கொடுத்தேன். கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டி இருந்ததற்காக, அபராதம் விதிக்கப்பட்டது. 

பாடகி சுசித்ரா தனக்கு அருளப்பட்ட இசைத்துறையில் தன்னுடைய கவனத்தை செலுத்தலாம். நான் மிகவும் சாதாரண நிலையில் இருந்து இந்த நிலைக்கு வந்துள்ளேன், பண தேவைக்காக லோக்கலில் நடக்கும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடி உள்ளேன், கடுமையாக உழைத்து இன்று இந்த நிலைக்கு வந்துள்ளேன், ஆனால் இன்று உலகின் முன்னணி பாடகர்களுடன் முன்னணி நிறுவனங்களுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறேன்.

தரம் தாழ்ந்து விமர்சனங்களுக்கு நான் தகுதியானவள் அல்ல, அதனால் வன்மமாக விமர்சித்து, என்னுடைய பெயரை கலங்கப்படுத்தாதீர்கள். நானும் ரவியும் கோவாவின் அப்பார்ட்மெண்ட் வாங்கி விட்டதாக சிலர் சொல்கிறார்கள்.  உண்மையிலேயே அது என்னுடைய நீண்ட நாள் ஆசை. நடந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் ரவியும் நானும் வெறும் நண்பர்கள். ஜெயம் ரவி யார் என்று அவர் டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பும் வரை நான் பழகி தெரிந்து கொள்ளவில்லை. அதேநேரம் அவருடைய மனைவி ஆர்த்தி என்ன நடக்கிறது என்று தெரியவில்லை, டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பப் போவதே தெரியாது என்று சொன்னதெல்லாம் பச்சை பொய். 

எனக்கும் ஜெயம் ரவி இடையேயும் ரொமான்டிக் உறவு இருப்பதாக வெளியாகும் செய்திகள் மீடியாக்கள் பரப்பியதே, அதனால் ஒருவேளை வருங்காலத்தில் எங்களுக்குள் ஏதேனும் ஏற்பட்டால் அதற்கு அவர்களே காரணம். 

ரவியுடனான என்னுடைய உறவு தொழில் சார்ந்தது. அதற்கு மேல் எங்களுக்குள் எதுவும் இல்லை, எங்களுடைய எல்லைகள் எங்கள் இருவருக்குமே நன்றாக தெரியும். நான் தனியாக வளர்ந்தவள், என்னுடைய பெற்றோர் இறந்துவிட்டார்கள். ஒரு ஹீலிங் சிகிச்சையாளர் என்ற முறையில் ஜெயம் ரவியின் வலியை என்னால் உணர முடிகிறது. அவருடைய குடும்பம் அவருக்கு கொடுத்த வலி என்னுடைய வலியை விட பெரியது. வார்த்தையும் ஆர்த்தியும் பெற்றோர் மூலமாகவும் ஜெயம் ரவி சந்தித்த கொடுமைகளை கேட்டபோது என் மனம் காயப்பட்டது. யாருக்குமே எப்போதும் அது போன்ற நிலை வந்து விடக்கூடாது. நான் ஹீலிங் செஷன் மேற்கொண்ட போது ஜெயம் ரவி சொன்ன விஷயங்கள் அனைத்தையும் நோட்ஸில் எடுத்து வைத்துள்ளேன், தேவை எனில் அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் தயாராக உள்ளேன். 

ஜெயம் ரவியும் ஆர்த்தியும் பிரிந்ததற்கான காரணத்தை அவர்கள் இருவரும் தான் சொல்ல வேண்டும். உண்மையில் ஜெயம் ரவிக்கு செய்த செயல்களை நினைத்து ஆர்த்தி பயப்படுகிறார், அதன் காரணமாகவே அதை மூடி மறைக்க என்னுடைய பெயர் பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில் ஜெயம் ரவியின் இமேஜை கெடுக்கவும், அவரின் பேங்க் அக்கவுண்ட் முடக்கவும் ஆர்த்தி பல செயல்களை செய்துள்ளார். 

ஆனால் இது அவர்கள் இடையேயான பிரச்சனை இதில் நடுவில் நான் வர விரும்பவில்லை. தொடர்ந்து என்னைப் பற்றி பேசிக் கொண்டிருந்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறேன்.

பொழுதுபோக்கு வீடியோக்கள்

’’உங்க இஷ்டத்துக்கு தீர்ப்பு வழங்க முடியுமா?’’ஜனநாயகன் vs நீதிபதிகள் COURT-ல் நடந்தது என்ன? | Jana Nayagan Judgement
’’உங்க இஷ்டத்துக்கு தீர்ப்பு வழங்க முடியுமா?’’ஜனநாயகன் vs நீதிபதிகள் COURT-ல் நடந்தது என்ன? | Jana Nayagan Judgement
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Top 5 Richest Actors India: இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
Embed widget