Anitha sampath | படித்துறை கட்ட 12 லட்சமா?அனிதா சம்பத்துக்கு குட்டு!TN FACT CHECK விளக்கம்
என்னது ஒரு படிக்கட்டு கட்ட 11 லட்சமா? அவன் அவன் வீடே 12 லட்சத்துக்கு கட்டிடுறாங்க என்று நடிகை அனிதா சம்பத் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் போட்ட வீடியோ சமூக வளைத்தளங்களில் வைரலாக பரவ, இது ஒரு பொய்யான செய்தி.. வதந்திகளை பரப்பாதீர்கள்.. என்று TN fact check unit தங்களுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
அண்மையில் சின்னத்திரை நடிகையான அனிதா சம்பத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் “நான் மாங்காடு பக்கத்தில் கொழுமணிவாக்கம் பகுதியில் இருக்கிறேன், இங்கே நடைப்பாதை, படிக்கட்டு போடுவதற்கு 11 லட்சத்தி 36 ரூபாய் ஆகி இருக்கிறது, இப்போது அந்த படிக்கட்டை இப்போ நான் காட்டுகிறேன். இத போட 11 லட்சம் ஆகுமா? 12 லட்சத்திற்கு அவுங்க அவுங்க வீடே கட்டுறாங்க.. நானும் சுத்தி முத்தி பாத்தேன். ஆனா வேற எங்கயும் படிக்கட்டல.. இந்த ஒரே ஒரு படிக்கட்டுக்கு 11 லட்சம் ஆகுமா? இத பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க என்று பதிவிட்டிருந்தார்..
இது இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், மாநகராட்சி முதல் உள்ளாட்சி வரை அனைத்திலும் ஊழல் நடப்பதாக பதிவிட்டு வந்தனர்.
இந்நிலையில் தான் தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு, இது ஒரு பொய்யான செய்தி, வதந்திகளை பரப்பாதீர் என்று தரவுகளை பதிவிட்டு இதற்கு விளக்கமளித்துள்ளது.





















