மேலும் அறிய
Yash Speech on Beast: நானே விஜய் ஃபேன்தான்..பத்திரிகையாளரை கதறவிட்ட யஷ்
Yash Speech on Beast: கேஜிஎப் திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளதால், இணையத்தில் இந்த டிரெய்லர் குறித்துதான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்தசூழலில், கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் வெளியீடு விழாவில், நடிகர் விஜய் குறித்து நடிகர் யஷ் பேசியுள்ளார். அதில், அவர், இது தேர்தல் அல்ல, சினிமா. இது கேஜிஎப் VS பீஸ்ட்க்கான போட்டி அல்ல. நடிகர் விஜய் சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு, கண்டிப்பாக பீஸ்ட் படத்தை பார்ப்பேன். விஜய் சாரின் ரசிகர்கள் கண்டிப்பாக கேஜிஎப் இரண்டாம் பாகத்தை விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க





















