IRCTC ல் இனி பஸ் டிக்கெட்டும் புக் பண்ணலாம்... இதோ அதன் விபரம்!
IRCTC ல் பேருந்து பயண முன்பதிவு இதுவரை சோதனை அடிப்படையில் தான் இருந்து வந்தது. தற்போது இதன் செயல்பாடு நாடு முழுவதும் முழுமையாக செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
IRCTC யை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு வசதியாக ரயில் டிக்கெட்டுகளுடன் இனி மேல் பேருந்து டிக்கெட்டுகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற வசதியை இந்திய ரயில்வே வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
IRCTC எனப்படும் இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம் கார்ப்பரேசன் மூலம் இதுவரை பயணிகள் ரயில் டிக்கெட், விமான டிக்கெட், வடகிழக்கு இந்தியா, வடமாநிலம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா பேக்கேஜ் உள்ளிட்ட வசதிகளை மகிழ்ச்சியுடன் பெற்றுவந்தனர். இந்நிலையில் பயணிகளுக்கு மேலும் ஒரு நற்செய்தியை இந்திய ரயில்வே வாரியம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ஒரு லாகின் ஐடி மற்றும் பாஸ்வோர்ட் மூலம் பயணிகள் வீட்டில் இருந்தே சுலபமாக தங்களது பயணத்திற்கான ரயில் மற்றும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வந்த நிலையில், ரயில் பயணத்திற்கு அடுத்தவாறு மக்கள் அதிகம் உபயோகிக்கக் கூடிய பேருந்து சேவைக்கான முன்பதிவு செய்யும் புதிய வசதியை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
தற்போது பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை 22 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் அறிமுகம் செய்துள்ளது. பல மாதங்களாக நடைபெற்ற நீண்ட சோதனை முறையில் இருந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் செயல்படுத்தவுள்ளது. இதுக்குறித்து IRCTC வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பல மாதங்களுக்கு முன்னதாக பேருந்து பயண முன்பதிவிற்கான சோதனை முயற்சி தொடங்கப்பட்ட நிலையில் தற்போது நாடு முழுவதும் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது. எனவே பயணிகள் https://www.bus.irctc.co.in/home என்ற இணையதளத்திற்கு சென்று பயணதிற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
#Book AC/Non AC bus tickets today on #IRCTCBus to complete your #travel plans.
— IRCTC (@IRCTCofficial) October 7, 2021
Competitive prices, seat selection & multiple payment options are just some of the #benefits you can #avail. For more, visit https://t.co/zptKFfKZT2 #IRCTC
மேலும் இதன் மூலம் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துக்கொள்ள முடியும் எனவும், இதற்காக நாடு முழுவதும் உள்ள 50 ஆயிரம் பேருந்து ஆபரேட்டர்களுடன் ஐஆர்சிடிசி இணைந்து பணியாற்றுகிறது. இதோடு முன்பதிவு செய்யும் போது டிக்கெட் தொகையைத் தவிர பயணிகளிடம் எந்தவித கூடுதல் கட்டணமும் வசூலிப்பது கிடையாது என IRCTC தெரிவித்துள்ளது. எனவே இதன் மூலம் இனிமேல் சுலபமாக நாடு முழுவதும் எங்கு பயணிக்க நினைக்கிறோமோ? அங்கு செல்வதற்கான டிக்கெட்டுகளை சுலபமாக புக்கிங் செய்துக்கொள்ளலாம். மேலும் IRCTC வுடன் உங்களுடைய ஆதாரை இணைக்கும் போது, ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துக்கொள்ள முடியும் எனவும் இந்திய ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.