மேலும் அறிய

WhatsApp: இனி கம்முனு கிடக்காது குரூப்! வேலையைத் தொடங்கிய வாட்ஸ் அப்! வருகிறது அசத்தலான ஒரு அப்டேட்!

வாட்ஸ் அப் குரூப்பில் போல் (poll) ஆப்ஷனை மிக விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது வாட்ஸ் அப். 

பலராலும் பயன்படுத்தப்படும் பிரபலமான ஆப் வாட்ஸ் அப். மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த ஆப், பயனாளர்களுக்காக பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. டெக்ஸ்ட் மட்டுமின்றி, போட்டோ, வீடியோ, ஃபைல், லொகேஷன், பண பரிவர்த்தனை என புதுப்புது வசதிகளை கொடுத்து தங்களது பயனர்களை கையிலேயே வைத்துள்ளது வாட்ஸ் அப். வாட்ஸ் அப்புக்கு போட்டியாக சிக்னல், டெலகிராம் இருந்தாலும் வாட்ஸ் அப்பை பின்னுக்குத்தள்ள முடியவில்லை. தினம் தினம் புதுப்புது அப்டேட்களை சோதனை செய்து வரவேற்பு இருக்கும்பட்சத்தில் அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது வாட்ஸ் அப்.  இந்நிலையில் வாட்ஸ் அப் குரூப்பில் போல் (poll) ஆப்ஷனை மிக விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது வாட்ஸ் அப். 

அதற்கான முதற்கட்ட வேலைகளில் அந்நிறுவனம் இறங்கிவிட்டது. குரூப்பில் உள்ள பயனர்கள் எதாவது ஒரு தலைப்பில் வாக்கெடுப்பு போல ஓட்டு போடும் முறையிலான poll ஐ உருவாக்கலாம்.டெலக்ராமில் இந்த வசதி தற்போது இருக்கும் நிலையில் அதேபோன்ற வசதியை வாட்சப்பிலும் கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறது வாட்சப் நிறுவனம். குழுவில் உள்ள உறுப்பினர்கள் அதில் தாங்கள் எதற்கு வாக்களிகக் வேண்டுமோ அதற்கு வாக்களிக்கலாம். எந்த ஆப்சனுக்கு எவ்வளவு வாக்குகள் என்ற விவரங்கள் அதில் தெரியவரும். ஆனால் யார் எந்த ஆப்சனுக்கு வாக்களித்தார்கள் என்ற விவரம் எதுவும் தெரியாது. மற்ற மெசேஜ்களைப் போலவே இதுவும் எண்ட் டூ எண்ட் முறையில் இருக்கும். poll முறையில் எத்தனை ஆப்ஷன், வாக்களிப்பது எப்படி உள்ளிட்ட வேறு எந்த தகவலையும் அந்நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. தற்போது முதற்கட்ட சோதனையில் மட்டுமே இருப்பதால் இன்னும் இந்த முறை பீட்டா வெர்ஷனக்கே அறிமுகம் ஆகவில்லை. முதற்கட்ட சோதனை முடிவடைந்தபின் பீட்டா வெர்ஷனில் அறிமுகமாகும். அங்குள்ள பயனர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும்பட்சத்தில் அனைவருக்கும் விரைவில் அறிமுகமாகும்.


WhatsApp: இனி கம்முனு கிடக்காது குரூப்! வேலையைத் தொடங்கிய வாட்ஸ் அப்! வருகிறது அசத்தலான ஒரு அப்டேட்!

வாட்ஸ் அப்பில் பழைய மெசேஜ்களை தேடி எடுக்க நாம் எல்லாம், மொபைலை போட்டு ஸ்க்ரோல் செய்கிறோம்.  வாட்ஸ் அப்பில் வந்துள்ள புதிய அப்டேட்டால் நாம் இனி ஸ்க்ரோல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.  புதிதாக அப்டேட் கொடுக்கப்படவுள்ள வாட்ஸ் அப்பில் குழு அல்லது பர்ஷ்னல் ஷேட்டில் கொடுக்கப்படவுள்ள சர்ச் பாக்ஸில் தேதியை குறிப்பிட்டு தேடினால், அந்த தேதிக்குரிய மெசேஜ்கள் ஸ்கிரீனில் தோன்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட்  WhatsApp beta iOS 22.0.19.73-வானது ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிலிப்பைன் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், வாட்ஸ் அப் குழுவில் உள்ள தேவையற்ற மெசேஜ்களை குழுவின் அட்மின் நீக்கி, குழு மிகவும் இயல்பாக இயங்கவைக்க இந்த அப்டேட் உதவியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Past group participants: 

இதுவரை வாட்ஸ் அப் குரூபில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று காண முடியும். இந்நிலையில், விரைவில், வாட்ஸ் அப் குழுவிலிருந்து யாராவது விலகி இருந்தார் அவர்கள் பற்றிய தகவலை 60 நாட்களுக்கு பெறும் வகையில் புதிய அப்டேட் வர இருக்கிறது. இதன்மூலம், வாட்ஸ் அப் குழுவில் இருந்து யாரெல்லாம் லெஃப்ட் ஆகியிருந்தால் அவர்களை கண்டுகொள்ள முடியும்.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget