மேலும் அறிய

Whatsapp Update: போச்சா! வாட்ஸ் அப் இனி இலவசம் கிடையாது... ஆப்பு வைத்த மெட்டா நிறுவனம்!

வாட்ஸ் அப்பில் 15GB வரை மட்டுமே Backup எடுக்க முடியும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

Whatsapp Update: வாட்ஸ் அப்பில் 15GB வரை மட்டுமே Backup எடுக்க முடியும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.  2024ஆம் ஆண்டில் இருந்து  இந்த அம்சம் நடைமுறைக்கும் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்  அப்:

தகவல் தொடர்புக்காக எத்தனையோ செயலிகள் இருந்தாலும், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், அவற்றிற்கு எல்லாம் முன்னோடியாக வாட்ஸ்-அப் செயலி உள்ளது. குறுந்தகவல்களை பரிமாறிக் கொள்ளும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, அலுவலகங்களின் பாதி வேலையை இருந்த இடத்தில் இருந்து கொண்டே முடிக்கும் அளவிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த செயலி மெட்டா குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேலும் மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது புதிய வசதியை கொண்டு வர உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.  

15 ஜிபி மட்டும்:

வாட்ஸ் அப்பில் 15GB வரை மட்டுமே Backup எடுக்க முடியும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது, வாட்ஸ் அப்பில் Backup எடுப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது. ஏற்கனவே பல டெக் நிறுவனங்கள் இலவச சேவைகளை நிறுத்திவிட்டு, சந்தா முறையை அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் கூட, ஸ்பாட்டிபை நிறுவனம் சந்தா தொகையை அறிமுகப்படுத்தியது.

அதாவது, ஒரு பாடலில் குறிப்பிட்ட பாடல் வரியை Forward செய்து  கேட்க வேண்டுமென்றால், சந்தா தொகையை கட்டாயம் செலுத்த வேண்டிய நிலை வந்திருக்கிறது. இந்நிலையில், தான் தற்போது வாட்ஸ் அப்பில் சந்தா முறை அறிமுகமாக உள்ளது.  அதாவது, வாட்ஸ் அப்பில் 15 ஜிபி வரை மட்டும் பேக்அப் எடுக்க முடியும். உங்கள் தனிப்பட்ட கூகுள் கணக்கில் பேக் அப் ஆகும். 15 ஜிபிக்கு மேல் பேக்அப் போனால் தேவையில்லாத தரவுகளை டெலிட் செய்ய வேண்டும். இல்லையென்றால், டிரைவ் சேமிப்பை மாதம் மாதம் சந்தா கட்டணம் செலுத்தி வாங்க வேண்டும். 

எப்போது அறிமுகம்?

இது குறித்து கூகுள் ஊழியர் கூறுகையில், "வாட்ஸ் அப்பில் 15ஜிபிக்கு மேல் பேக்அப் எடுக்க முடியாது. ஒருவேளை 15ஜிபி தாண்டிவிட்டால், நாம் மாதம் மாதம் கட்டணம் செலுத்த வேண்டும், இல்லையென்றால் ஃபைலை டெலிட் செய்ய வேண்டியிருக்கும். இந்த அம்சம் எப்போதும் போல் முதலில் வாட்ஸ் அப் பீட்டா பயனர்களுக்கு கிடைக்கும். இந்த அம்சம் டிசம்பர் மாதத்தில் பீட்டா பயனர்களுக்கு கிடைக்கப்பெற, அடுத்தடுத்து அனைத்து பயனர்களுக்கும் விரிவடையும்" என்று தெரிவித்தார். இந்த  அறிவிப்பு வாட்ஸ் அப் பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

AI Pin: இனி ஃபோனே வேண்டாம்..! AI Pin என்றால் என்ன? கையடக்க சாதனம் கொண்டுள்ள ஆச்சரியம் தரும் அம்சங்கள்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget