AI Pin: இனி ஃபோனே வேண்டாம்..! AI Pin என்றால் என்ன? கையடக்க சாதனம் கொண்டுள்ள ஆச்சரியம் தரும் அம்சங்கள்
AI Pin Explanation: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்ட AI Pin என்ற சாதனத்தின் பயன்பாடு என்ன, அது எப்படி செயல்படுகிறது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
AI Pin Explanation: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்ட AI Pin என்ற சாதனம் பயனாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
AI Pin என்றால் என்ன?
AI பின் என்பது திரையே இல்லாத பயனாளர்கள் தங்களது உடைகளில் அணியக்கூடிய ஒரு சாதனமாகும். இது தொழில்நுட்பத்துடன் தொடர்புகொள்வதற்கான மிகவும் இயற்கையான கருவியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் இருவர் சேர்ந்து தொடங்கியுள்ள ஹ்யூமனே (HUMANE) எனப்படும் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் தான் இந்த சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சிறிய மற்றும் குறைந்த எடைகொண்ட இந்த சாதனம் காந்தகம் மூலம், பயனாளர்களின் உடையில் ஒட்டிக்கொள்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் இந்த சாதனம், சென்சார்ஸ் மற்றும் புரொஜக்டர்ஸ் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது.
AI Pin தொழில்நுட்ப அம்சங்கள் என்ன?
AI பின் சாதனமானது குவால்கம் ஸ்னாப்டிராகன் புராசசர் மூலம் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது (அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை). கேமரா,மைக்ரோஃபோன் மற்றும் ஆக்சிலரோமீட்டர் உள்ளிட்ட சென்சார்களை கொண்டுள்ளது. அதோடு, தேவையான தகவல்களை பயனாளர்களின் கைகள் மற்றும் தரைகளில் ஒளிபரப்பும் வகையில் புரொஜக்டர் அம்சமும் இதில் இடம்பெற்றுள்ளது.
This is the Humane Ai Pin https://t.co/ytUSGF3y55 pic.twitter.com/Zrcoaf49u7
— Humane (@Humane) November 9, 2023
AI Pin செயல்படுவது எப்படி?
பயனாளர்களின் சூழலைப் புரிந்துகொள்வதற்கும் தொடர்புடைய தகவல் மற்றும் செயல்பாடுகளை வழங்குவதற்கும் ஏற்ற வகையில், சென்சார்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் கலவையாக இந்த சாதனம் செயல்படுகிறது. உதாரணமாக, பயனாளர் தெருவில் நடந்து கொண்டிருந்தால், AI பின் தனது கேமராவைப் பயன்படுத்தி பயனாளரைச் சுற்றியுள்ள பொருட்களையும், முக்கிய இடங்களையும் அடையாளம் கண்டு சேகரித்துக் கொள்ளும். பின்பு தேவைப்படும் போது அருகிலுள்ள உணவகத்தின் பெயர் அல்லது பேருந்து நிறுத்தத்திற்கான தூரம் போன்ற சூழல் சார்ந்த தகவலை பயனாளர்களுக்கு வழங்கும். 2024 ஆம் ஆண்டில் நேவிகேஷன் அம்சமும் இதில் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
AI பின்னை மற்ற சாதனங்களைக் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தலாம். உதாரணமாக AI பின்னைப் பயன்படுத்தி அழைப்புகளைச் மேற்கொள்ளலாம், குறுஞ்செய்திகளை அனுப்பலாம் மற்றும் வீட்டில் உள்ள ஸ்மார்ட் ஹோம் சாதனங்களைக் கட்டுப்படுத்தலாம். ஸ்மார்ட் ஃபோனில் பாடலகளை கூட ஒலிக்கச் செய்யலாம். அதோடு, மொழிபெயர்ப்பு சேவைகள், மெய்நிகர் உதவியாளர்கள் மற்றும் தனிப்பட்ட பயிற்சியாளர்கள் போன்ற பல்வேறு AI-சார்ந்த பயன்பாடுகளை அணுகவும் AI பின்னைப் பயன்படுத்தலாம்.
தனியுரிமையை பாதுகாப்பதை கருத்தில் கொண்டும் AI பின் வடிவமைக்கப்பட்டுள்ளது. AI பின்னில் உள்ளமைக்கப்பட்ட தனியுரிமை இண்டிகேட்டரானது சாதனத்தின் கேமரா, மைக்ரோஃபோன் அல்லது சென்சார்கள் செயலில் இருக்கும்போது நோட்டிபிகேஷனை வழங்கும். தேவைப்பட்டால் அந்த சென்சார்களை பயனாளர்கள் ஆஃப் செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்க வீடியோ மேலே இணைக்கப்பட்டுள்ளது.
விலை விவரம்:
சுமார் 55 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இந்த சாதனத்தை humane நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம். அவற்றின் விநியோகம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதக் கட்டணம் செலுத்துவதன் மூலம் பயன்பாட்டிற்கான அன்லிமிடெட் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.